Madharaasi First Week Box Office: ஒரு வாரமாக ஓடும் SKவின் மதராஸி.. எவ்வளவுதான் கல்லா கட்டுச்சு?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கதாநாயகனாக உருவாக்கியுள்ள படம் என்றால் அது மதராஸி தான். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி நேற்றுடன் அதாவது செப்டம்பர் 11ஆம் தேதியுடன் ஒரு வாரம் ஆகிறது. இந்த ஒரு வாரத்தில் படத்தின் வசூல் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
சிவகார்த்திகேயன் என்றாலே காமெடி, ஜனரஞ்சகமான குறிப்பாக காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் படங்களில் தான் அதிகம் நடிப்பார். இப்படி இருக்கையில் அமரன் படத்தினை ஆக்ஷன் படம் என்று வகைப்படுத்த முடியாது என்றாலும், வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜினின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டதால் அந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இப்படி இருக்கையில் சிவகார்த்திகேயனுக்கு முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் படமாக அமைந்த படம் என்றால் அது மதராஸி தான்.
ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க முடிவெடுத்த பின்னர் எதற்கா அதிலும் சின்ன சின்ன லேயர் போட்டுக் கொண்டு நடிக்க வேண்டும். 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இந்த படத்தை பார்க்க அனுமதிக்க வேண்டும் என சென்சார் தரப்பில் வழங்கப்பட்ட சான்றிதழில் குறிப்பிடும் லெவலுக்கு இறங்கி ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் ஆக்ஷன் கதாநாயகனாக மாற தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டார் என்பது. அதற்கு ஏற்றது போல மதராஸி படத்தில் மிகவும் ஆக்ரோஷமாக சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார்.

ஏமாற்றம்: மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், பிஜு மேனன், வித்யூத் ஜாமவால், விக்ராந்த், ஷபீர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். மூன்று டிராகன் டெம்ப்ளேட் போல படக்குழு உள்ளது. படத்தின் சண்டைக் காட்சிகளும் வேற லெவலில் உள்ளது. ஆனால் படத்தின் திரைக்கதையில் ஏகப்பட்ட சொதப்பலும் லாஜிக் இடிக்குதே பாஸ் என்று கூறும் அளவுக்கு உள்ளது. சண்டைக் காட்சிகளுக்காகவும் ருக்மிணி வசந்த் வருகின்ற காதல் காட்சிகளுக்காகவும் படத்தைப் பார்க்கலாம். மற்றபடி படத்தில் தரமான கதையும் திரைக்கதையும் இருக்கும் என்று நினைத்து பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.
ஒரு வார வசூல்: இப்படி இருக்கையில் முதல் இரண்டு நாட்களில் படம் ரூபாய் 50 கோடிகளை உலகம் முழுவதும் வசூலித்தது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லக்ஷ்மி ஃபிலிம்ஸ் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கட்டது. இப்படி இருக்கையில் படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிறது. வார இறுதி நாட்களில் படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும், அதன் பின்னர் வார நாட்களில் கணிசமாக குறையத் தொடங்கியது. இது வசூலிலும் எதிரொலிக்க தொடங்கியது. இப்படி இருக்கையில் படம் முதல் வாரத்தில் இந்தியா முழுவதும் சுமார், ரூபாய் 49 கோடிகள் முதல் ரூபாய் 50 கோடிகள் வரை வசூலித்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று சாக் நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. இப்படி இருக்கையில் படம் முதல் வாரத்தில் உலகம் முழுவதுமான வசூலைக் கணக்கில் கொண்டால் சுமார் ரூபாய் 75 கோடிகளில் இருந்து ரூபாய் 80 கோடிகள் வரை வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











