Don't Miss!
- News
உயரப் போகுது விலை! தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு
- Finance
7 லட்சம் வரையில் ஜீரோ வருமான வரி.. முழு விபரம்..! யாருக்கெல்லாம் நன்மை..!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அந்த வசனத்தை பார்த்து அப்செட் ஆன உதயநிதி ஸ்டாலின்.. மேடையில் மன்னிப்புக் கேட்ட சிவகார்த்திகேயன்!
சென்னை: "நான் வேணா அரசியல்வாதி ஆகிடவா?" என சிவகார்த்திகேயன் கேட்க, அதற்கு அவரது நண்பர் ஆர்.ஜே. விஜய் "வேணாம்டா அதிகமா பொய் சொல்லணும்" என்கிற வசனம் டான் டிரைலரின் இறுதியில் இடம்பெற்று சர்ச்சையை கிளப்பி உள்ளது.
நேற்று நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் அருகே அமர்ந்து கொண்டு சிவகார்த்திகேயன் அந்த காட்சியை பயந்து கொண்டே பார்த்தார்.
அந்த வசனத்தை பார்த்ததும் உதயநிதி ஸ்டாலின் சிவகார்த்திகேயனை பார்த்து என்ன சொன்னார் என்பதை மேடை ஏறி பேசும் போது சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்டார் சிவகார்த்திகேயன்.
இந்த
தேதியில்
நடக்கிறதா
விக்னேஷ்
சிவன்
-நயன்தாரா
திருமணம்?
வெளியானது
பரபரப்பான
தகவல்

டான் ரிலீஸை முன்னிட்டு
சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வரும் மே 13ம் தேதி வெளியாவதை முன்னிட்டு நேற்று பிரம்மாண்டமாக டான் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. மேடை ஏறி பேசிய பலரும் சிவகார்த்திகேயனை அடுத்த சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு வைத்து பாராட்டி விட்டனர். இயக்குநர் சிபி சக்கரவர்த்தி டான் திரைப்படம் பெரிய அளவில் இருக்கும் என அவரே கூறிவிட்டார்.

சம்மர் ட்ரீட்
எஸ்.ஜே. சூர்யா பேசும் போது, மாநாடு படம் வெளியாகும் நாள் தான் ரியல் தீபாவளி என சொன்னேன். அதே மாதிரி நடந்துச்சா.. இப்போ சொல்றேன் இந்த சம்மருக்கு எத்தனையோ படங்கள் வந்திருக்கலாம். ஆனால், டான் படம் தான் ரியல் சம்மர் ட்ரீட் என அதிரடியாக கூறி டான் படக்குழுவினரை உற்சாகப்படுத்தினார்.

அரசியல்வாதிகள் பொய் சொல்லுவாங்க
நான் வேணா சயின்டிஸ்ட் ஆகட்டுமா என்பதில் ஆரம்பித்து நாண் வேணா அரசியல்வாதி ஆகிடவா என டிரைலர் முழுக்க பல இடங்களில் சிவகார்த்திகேயன் பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. அரசியல்வாதியா வேண்டாம்டா நிறைய பொய் சொல்லணும் என ஆர்ஜே விஜய் சொல்ல அப்போ வேணாம் என சிவகார்த்திகேயன் சொல்லும் வகையில் டான் டிரைலர் நிறைவடைகிறது.

உதயநிதி ஸ்டாலின் பக்கத்திலேயே
இந்த டிரைலரை உதயநிதி ஸ்டாலின் பக்கத்திலே அமர்ந்து கொண்டு பார்த்த அந்த தில் தான் சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லப் போகிறது என அவரது ரசிகர்கள் ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்த காட்சியால் சற்றே கடுப்பான உதயநிதி ஸ்டாலின் மேடை ஏறியதும் சிவகார்த்திகேயனை வச்சு செய்து விட்டார்.

இந்த பொய் ஓகேவா
மேடையேறி பேசிய உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் டான் சிவகார்த்திகேயன் தான். அவர் வைத்தது தான் இப்போ சட்டம் என பேசினார். மேலும், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் இருவரும் தான் இப்போதைக்கு டான் எனக் கூறிவிட்டு, அரசியல்வாதினா பொய் சொல்லணும்னு வச்ச வசனத்துக்கு ஏற்ப பேசிவிட்டேன் இப்போ ஓகேவா என சிவகார்த்திகேயனை கேட்டு சரியான பதிலடி கொடுத்து விட்டார்.

மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்
இப்படியொரு வசனத்தை அதுவும் உங்க பக்கத்துல உட்கார்ந்து பார்க்க வைப்பாரு இயக்குநர் சிபி சக்கரவர்த்தின்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல சாரி சார் என மேடையிலேயே அந்த வசனம் சும்மா காமெடிக்காக வைத்தது தான் சார் மற்றபடி ஒன்றுமில்லை என சிவகார்த்திகேயன் உதயநிதி ஸ்டாலினை கூலாக்கி விட்டார்.

கடுப்பான விஜய் ரசிகர்கள்
சிவகார்த்திகேயன் பட ரிலீசுக்கு முன்பாக இப்படியொரு விழா நடைபெற்றதை பல விஜய் ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேலும், டிரைலரில் வகுப்பறையில் உட்கார்ந்துக் கொண்டு எந்திரன் படம் பார்க்கும் காட்சியும் விஜய் ரசிகர்களை கடுப்பாக்கியது. சமூக வலைதளங்களில் இதுவரை ரஜினிகாந்த் மற்றும் அஜித்துக்கு எதிராக ட்ரோல் செய்து வந்த விஜய் ரசிகர்கள் புதிதாக சிவகார்த்திகேயனையும் ஆபாசமாக பேசி ட்ரோல் போட துவங்கி விட்டனர்.