ஆங்கர் டூ பாடலாசிரியர்...இதெல்லாம் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்களா ?

சென்னை : நடிகர், தயாரிப்பாளர் என்பதை தாண்டி பாடலாசிரியராகவும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்து, வெற்றி பெற்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் பாடலாசிரியர் அவதாரம் பற்றி இங்கே பார்க்கலாம்.

விஜய் டிவி ஆங்கராக வாழ்க்கையை துவக்கிய சிவகார்த்திகேயன், தனுஷ் நடித்த 3 போன்ற படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாக கோலிவுட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். படிப்படியாக வளர்ந்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ, 100 கோடி வசூல் நாயகன்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என தான் எடுக்கும் அத்தனை அவதாரங்களிலும் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்து, தான் தடம் பதிக்கும் இடங்களில் எல்லாம் வெற்றி கொடி நாட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். பாடலாசிரியராக சிவகார்த்திகேயன் வரிகளில் உருவாகி ஹிட் அடித்த பாடல்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

 கோலமாவு கோகிலா

கோலமாவு கோகிலா

நெல்சன் திலீப்குமார் டைரக்டராக அறிமுகமான கோலமாவு கோகிலா படத்தில் அனிருத் இசையில், கல்யாண வயசு தான் பாடல் தான் சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக தமிழ் சிவிமாவில் எழுதிய முதல் பாடல். யோகிபாபு ஹீரோவாக நடித்த இந்த படத்தில் மெலடி, லவ் சாங்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது செம ரீச் கொடுத்தது.

கூர்கா

கூர்கா

மீண்டும் யோகிபாபு ஹீரோவாக நடித்த கூர்கா படத்தில் ஹே போயா என்ற பாடலை எழுதினார் சிவகார்த்திகேயன். விளையாட்டாக சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து நட்பிற்காகவும், பிரபலங்கள் பலர் கேட்டுக் கொண்டதாலும் தொடர்ந்து பல பாடல்களை எழுத துவங்கினார்.

நம்ம வீட்டு பிள்ளை

நம்ம வீட்டு பிள்ளை

யோகிபாபு படங்களை தொடர்ந்து தான் ஹீரோவாக நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்திற்காக காந்த கண்ணழகி பாடலை எழுதியதும் சிவகார்த்திகேயன் தான். முதல் முறையாக தனது படத்தில் வரும் டூயட் சாங்கிற்காக தானே பாட்டெழுதி நடித்தார் சிவகார்த்திகேயன். மிக பிரபலமான சூரியன் படத்தில் கவுண்டமணி பேசும் டயலாக்கை முதல் வரியாக வைத்து எழுதப்பட்ட இந்த பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது.

ஆதித்ய வர்மா

ஆதித்ய வர்மா

தெலுங்கில் பிளாக் பஸ்டர் படமாக ஓடிய அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தில் இது என்ன மாயமோ என்ற பாடலை சிவகார்த்திகேயன் எழுதினார். முதல் முறையாக புதிய இசையமைப்பாளரின் இசைக்கு சிவகார்த்திகேயன் பாடெழுதியது இந்த படத்தில் தான்.

டாக்டர்

டாக்டர்

மீண்டும் நெல்சன் திலீப்குமார், அனிருத், சிவகார்த்திகேயன் காம்போவில் உருவான டாக்டர் படத்தில் வரும் செல்லம்மா பாடலை எழுதினார் சிவகார்த்திகேயன். பட ரிலீசிற்கு முன்பே செம ஹிட்டான இந்த பாடல் தான் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்களில் முதல் முறையாக வெளியிடப்பட்ட உடனேயே செம வைரலான பாடல். டாக்டர்கள் படத்தில் வரும் சோ பேபி என்ற பாடலை எழுதியதும் சிவகார்த்திகேயன் தான்.

நாய் சேகர்

நாய் சேகர்

காமெடியன் சதீஷ் ஹீரோவாக அறிமுகமான நாய் சேகர் படத்திற்காக எடக்கு மொடக்கு பாடலை எழுதினார் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் பணியாற்றிய காலத்தில் இருந்தே சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருப்பவர் சதீஷ். இதனால் அவர் ஹீரோ ஆகும் படம் என்பதால் சிவகார்த்திகேயன் பாடல் எழுதி உள்ளார்.

 எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்


சிவகார்த்திகேயன் - சூர்யா முதல் முறையாக இணைந்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். யாரும் எதிர்பாராத இந்த காம்போ, சூர்யா நடித்து மார்ச் 10 ம் தேதி ரிலீசாக உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் ஒன்றிணைந்தது. இதில் செகண்ட் சிங்கிளாக வெளியிடப்பட்ட சும்மா சுர்ருன்னு என்ற பாடலை எழுதினார் சிவகார்த்திகேயன்.

பீஸ்ட்

பீஸ்ட்


விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டுள்ள அரபிக்குத்து பாடல் கடந்த 3 நாட்களாக இணையத்தை அடித்து நொறுக்கி வருகிறது. இப்படி ஒரு குத்தை இதுவரை கேட்டதில்லை என்பதை போல், ஹலமதி ஹபிபோ பாடல் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரையும் ஆட வைத்துள்ளது. இதன் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்ட 2 நாட்களில் 35 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. பாடல் வரிகள் புரியவில்லை என்றாலும் திரும்பிய பக்கமெல்லாம் இந்த பாடல் தான் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X