இந்த படத்திற்காகவா இப்படி மாறினாரு...நியூ லுக்கிற்கு மாறிய சிவகார்த்திகேயன்

சென்னை : யதார்த்தமான வசனங்கள், கவுன்ட்டர், டைமிங் காமெடி ஆகியவற்றால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் சிவகார்த்திகேயன். அவரது படங்கள் வரிசையாக ஹிட் ஆவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளி போய் கொண்டிருக்கிறது. அடுத்த படியாக அயலான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்த படமான டான் படத்திற்கு தயாராகி விட்டார் சிவகார்த்திகேயன்.

ஆளே மாறிய சிவகார்த்திகேயன்

ஆளே மாறிய சிவகார்த்திகேயன்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை அடர்ந்த தாடியுடன் இருந்த சிவகார்த்திகேயன், டான் பட ஷுட்டிங்கிற்காக தாடியை சேவ் செய்து ஆளே வேற மாதிரி மாரி உள்ளார். புதிய லுக்கில் தெரிய வேண்டும் என்பதற்காக தாடியை எடுத்துள்ளாராம் சிவகார்த்திகேயன்.

டானுக்காக புதிய லுக்

டானுக்காக புதிய லுக்

டான் படத்தில் காலேஜ் ஸ்டூடன்ட் ரோலில் நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன். அதற்காக தான் இந்த புதிய லுக்காம். ரொமாண்டிக் படமான டான் படத்தின் ஷுட்டிங் சில நாட்களுக்கு முன் சென்னையில் துவங்கியது. இந்த படத்தின் ஷுட்டிங் நீண்ட நாட்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிக்கட்டத்தில் டான் ஷுட்டிங்கா

இறுதிக்கட்டத்தில் டான் ஷுட்டிங்கா

தற்போது நடைபெறுவது கடைசி கட்ட படப்பிடிப்பாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே டான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. டான் படத்தின் பாதிக்கும் மேலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாம்.

மீண்டும் இணையும் பிரியங்கா மோகன்

மீண்டும் இணையும் பிரியங்கா மோகன்

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். டாக்டர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் பிரியங்கா மோகன். சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா தான் வில்லன்

எஸ்.ஜே.சூர்யா தான் வில்லன்

எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் சூரி, சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X