வெள்ள நிவாரணம்.. சிவகார்த்தி, பிரபு, சத்யராஜ் இன்று நிதி அளித்தனர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு இன்று நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன் மற்றும் சத்யராஜ் நிதி வழங்கினர்.
நடிகர் சிவகார்த்திகேயன் தன் பங்காக ரூ 5 லட்சம் வழங்கினார்.

நடிகர் பிரபு மற்றும் அவர் மகன் விக்ரம் பிரபு ரூ 5 லட்சம் வழங்கினர். நடிகர் சத்யராஜ் ரூ 2.25 லட்சம் கொடுத்தார்.

இவர்கள் இந்த நிதியினை நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் வழங்கினர்.

ஏற்கெனவே சூர்யா, கார்த்தி, சிவகுமார், விஷால், தனுஷ் ஆகியோர் நிதி வழங்கியுள்ளனர்.
இந்த நிதி மொத்தமாக விரைவில் முதல்வர் ஜெயலலிதாவிடம் கொடுக்கப்படும்.
Comments


Click it and Unblock the Notifications