லால் சிங் சத்தா படம் எப்படி இருக்கு...சிவகார்த்திகேயன் கொடுத்த ரெவ்யூவ பாருங்க

சென்னை : அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஃபாரஸ்ட் கெம்ப் படத்தை ரீமேக் செய்து லால் சிங் சத்தா என்ற பெயரில் அமீர் கான் உருவாக்கியுள்ளார்.

லால் சிங் சத்தா படத்தில் ஆமிர் கானுடன் கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் அதுல் குல்கர்னி திரைக்கதை வடிவமைத்துள்ள இந்தபடத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.முன்னணி இசையமைப்பாளர் பிரித லால் சிங் சத்தா படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தபடத்தை வயாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து அமீர்கான் தயாரித்துள்ளார்.

2 மணி நேரம் 44 நிமிடங்கள் ஓடக்கூடிய லால் சிங் சத்தா திரைப்படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த படம் இந்தியாவில் உள்ள 100 பிரபலமான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. 2020 ம் ஆண்டு முதல் பல முறை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு, பிறகு ஒத்திவைக்கப்பட்டது. பல போராட்டங்கைளக் கடந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

 Sivakarthikeyan gave review to Laal Singh Chaddha movie

படத்தின் புரொமோஷன் பணிகளில் அமீர்கான் தீவிரம் காட்டி வருகிறார். தமிழகத்தில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.இதையொட்டி திரை நட்சத்திரங்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதைப் பார்த்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அமீர் கான் படத்துடன் இன்ஸ்டாகிராமில் ரிவ்யூ சொல்லியுள்ளார்.

இன்ஸ்டாவில் சந்தோஷ் நாராயணன், 'லால் சிங் சத்தாவின் வாழ்க்கையை திரையில் பார்த்து சிரித்தேன், அழுதேன், கொண்டாடினேன்... படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்த உதயநிதிக்கு நன்றி' என்று கூறியுள்ளார். சந்தோஷின் பதிவைப் பார்க்கும்போது லால் சிங் சத்தா திரைப்படம் அவரை மிகவும் கவர்ந்திருப்பதாக நெட்டிசன்கள் கமென்ட் செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த படத்தை பார்த்து விட்டு, ரெவ்யூ கொடுத்துள்ளார். லால் சிங் சத்தா படம் பற்றி அவர் கூறுகையில், படம் முழுவதும் எங்கே ஒரு இடத்தில் மனிதத்தின் மதிப்பு பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஒரு பாசிடிவ்வான விஷயத்தையும் இந்த படம் பேசும். உறவு, உறவுகளின் மதிப்பு, மனிதநேயம், லவ் இதெல்லாம் பேசுகிறது.

இன்னைக்கு உலகத்துல, இன்னைக்கு சூழலில் இந்த மாதிரியான பாசிடிவிட்டி, அன்பு, காதல் எல்லாத்தையும் பேசுற படம் அவசியம். நாம் எப்போதெல்லாம் டவுனாக நினைக்கிறோமோ,எப்போதெல்லாம் வாழ்க்கையில் ஒரு மோட்டிவேஷன் தேவைப்படும் போதெல்லாம் போட்டு பாக்குற சில படங்கள் இருக்குல. அது போல இந்த லால் சிங் சத்தா படம் அமையும். அமீர்கான் சார், You are always great. I love you என தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X