»   »  சிவகார்த்திகேயனை கண் கலங்க வைத்த ரசிகை

சிவகார்த்திகேயனை கண் கலங்க வைத்த ரசிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரசிகையின் அன்பளிப்பை பார்த்து நெகிழ்ந்த சிவா கார்த்திகேயன்!- வீடியோ

சென்னை: சிவகார்த்திகேயனை ரசிகை ஒருவர் கண்கலங்க வைத்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து அசுர வளர்ச்சி அடைந்து பாக்ஸ் ஆபீஸ் கிங்காகியுள்ளார் சிவகார்த்திகேயன். ரஜினி, விஜய்யை அடுத்து குட்டீஸ்களின் செல்லமாகியுள்ளார்.

நடிப்பு தவிர படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

வருத்தம்

வருத்தம்

தான் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்ததை பார்க்க தனது அப்பா உயிருடன் இல்லையே என்ற வருத்தம் சிவகார்த்திகேயனுக்கு உண்டு. இதை அவரே சில இடங்களில் தெரிவித்துள்ளார்.

ஓவியம்

சிவகார்த்திகேயன் தனது தந்தையுடன் சேர்ந்து நிற்பது போன்ற ஒரு ஓவியத்தை ரசிகை ஒருவர் வரைந்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் ஆசையை ஓவியம் மூலம் நிறைவேற்றி வைத்துள்ளார் ரசிகை.

சிவகார்த்திகேயன்

ரசிகை வரைந்த ஓவியத்தை பார்த்த சிவகார்த்திகேயன் ட்வீட்டியிருப்பதாவது, உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லை. மகிழ்ச்சியாகவும், எமோஷனலாகவும் உள்ளது. அப்பாவுடன் சேர்ந்து ஒரு நல்ல புகைப்படம் கூட எடுக்கவில்லை என்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. இது எனக்கு ஸ்பெஷலானது. நன்றி மா. தெய்வங்கள் எல்லாம் தோற்றேப்போகும் தந்தை அன்பின் முன்னே... என தெரிவித்துள்ளார்.

குஷி

சிவகார்த்திகேயன் எமோஷனலானதை பார்த்து அவரது ரசிகர்கள் நெகிழ்ந்துள்ளனர். அப்பாவின் ஆசி உங்களுக்கு எப்பொழுதும் உண்டு அண்ணா என்று தெரிவித்துள்ளனர்.

English summary
Actor Sivakarthikeyan gets emotional after seeing a picture drawn by one of his fans. He tweeted that, 'I don know how to thank u 🙏 feeling very happy and emotional.. its been sad for me that i missed to take a good pic with appa..this one wil be very spl.. thanks again ma😊 தெய்வங்கள் எல்லாம் தோற்றேப்போகும் தந்தை அன்பின் முன்னே...'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X