Madharaasi Disaster: சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துல லாஜிக்கே இல்லை.. சூர்யா, தனுஷ் ஃபேன்ஸ் ட்ரோல்!
சென்னை: முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகும் நாட்களில் படத்தை பார்ப்பதற்கு முன்பே விர்ச்சுவல் வாரியர்ஸ் தங்களது ரசிக சண்டையை ஆரம்பித்து விடுகின்றனர். அதிகாலை 4 மணிக்கெல்லாம் சூர்யா மற்றும் தனுஷ் ரசிகர்கள் அதிகளவில் மதராஸி படத்துக்கு #madharaasidisaster ஹாஷ்டேக்கை ஓட்டி வருகின்றனர்.
சூரரைப் போற்று படத்தின் பாடை கட்டும் "மண்ணுருண்ட" பாடல் காட்சி சீனையெல்லாம் எடுத்துப் போட்டு மதராஸி படம் டிசாஸ்டர் என்றும் கொஞ்சம் கூட லாஜிக் இல்லாத படம் தான் மதராஸி என்றும் சிவகார்த்திகேயன் படத்துக்கு முதல் நாள் ஓபனிங்கே இல்லை என ட்ரோல் செய்து வருகின்றனர்.

கல்யாணி பிரியதர்ஷனின் லோகா மற்றும் காஞ்சுரிங் லாஸ்ட் ரைட்ஸ் படத்துக்குத்தான் டிக்கெட் புக்கிங் அதிகரித்து வருவதாகவும் ஸ்க்ரீன் ஷாட்களை பதிவிட்டு வருகின்றனர்.
மதராஸி டிசாஸ்டர் ஹாஷ்டேக்: மதராஸி பிளாக்பஸ்டர் ஹாஷ்டேக்கை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஒரு பக்கம் டிரெண்டு செய்து வர இன்னொரு பக்கம் மதராஸி டிசாஸ்டர் ஹாஷ்டேக்கை சிவகார்த்திகேயன் ஹேட்டர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். மதராஸி படத்தில் ஒன்றுமே இல்லை என்றும் ஏ.ஆர். முருகதாஸ் மறுபடி ஏமாற்றிவிட்டார் என்றும் ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.
சிவகார்த்திகேயனுக்கு சுத்தமா செட் ஆகல: நல்ல கதையை ஏ.ஆர். முருகதாஸ் தேவையில்லாமல் வீணடித்து விட்டார், இப்படியொரு கதாபாத்திரம் சிவகார்த்திகேயனுக்கு சுத்தமாக செட்டே ஆகவில்லை என நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
சோலி முடிந்தது: 24 ஆயிரத்துக்கும் அதிகமான போஸ்ட்டுகளை மதராஸி டிசாஸ்டர் ஹாஷ்டேக்கில் போட்டு டிரெண்டு செய்து விட்டோம் என சிவகார்த்திகேயன் ஹேட்டர்கள் ஏகப்பட்ட பதிவுகளை போட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் வருகிறது என்கிற அடிப்படை கதையே நல்லா இல்லை என்றும் இந்த படத்துக்கு ரெட்ரோ படம் எவ்வளவோ பரவாயில்லை என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்ற்னர்.
சிவகார்த்திகேயனும் சிக்கிட்டாரு: முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால் இப்படி டார்கெட் பண்ணி வளர்ச்சியை தடுக்கும் நெகட்டிவிட்டிகள் பரவி வரும் நிலையில், சிவகார்த்திகேயனும் இதில் சிக்கிக் கொண்டார் என்றும் தமிழ் சினிமா அடிமட்டத்துக்கு செல்ல காரணமே இதுபோன்ற ரசிக சண்டை தான் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











