Don't Miss!
- Sports
சிங்கம் களமிறங்கிடிச்சி.. ஜஸ்பிரித் பும்ராவின் கம்பேக் தேதி இதுதான்.. அதுவும் மாஸான போட்டியிலாம்!
- News
பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம்.. அதிமுகவை பின்னுக்கு தள்ள முயற்சி.. திருமாவளவன் குற்றச்சாட்டு!
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
SK 23 அப்டேட்: சிம்பு பட இயக்குநருடன் கூட்டணி வைக்கும் சிவகார்த்திகேயன்? அட அல்டிமேட் காம்போ தான்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 21ம் தேதி வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள பிரின்ஸ் படத்தின் ட்ரெய்லர் நேற்று (அக் 10) வெளியானது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தின் இயக்குநர் குறித்து அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது.
முதல்ல உங்க வாழ்க்கையை கொண்டாடுங்க.. லைஃப் சீக்ரெட் சொன்ன சிவகார்த்திகேயன்!

கலக்கும் எஸ்கே
சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டில் இப்போது அடைமழை தான் அடித்து வருகிறது. டாக்டர், டான் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து டாப் கியரில் பறந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின், பிரின்ஸ் தீபாவளிக்கு வெளியாகிறது. அனுதீப் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் ட்ரெய்லரை நேற்று படக்குழு வெளியிட்டது. சென்னை ஜேப்பியர் கல்லூரியில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரின்ஸ் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதுவும் ஜாலியான படம் தான்
பிரின்ஸ் ட்ரெய்லரை பார்க்கும் போதே, படம் ரொம்பவே கமர்சியலாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் எதிரும்புதிருமாக கலக்கிய சிவாவும் சத்யராஜும், இந்தப் படத்தில் அப்பா, மகனாக நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் ரொம்பவே ஜாலியான வாத்தியாராக நடித்துள்ளார். பிரின்ஸ் படம் தான் சிவகார்த்திகேயனுக்கு முதல் தீபாவளி ரிலீஸ் என்பதால் அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், நேற்று வெளியான பிரின்ஸ் ட்ரெய்லர் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

அடுத்து செம்ம கூட்டணி
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படமும் கார்த்தியின் சர்தாரும் தீபாவளி ரேஸில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கும் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். மாவீரனுக்கு பின் அயலான் படத்தில் எஞ்சியிருக்கும் பகுதிகளை நடிக்க சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளாராம். அதன் பின்னர் தனது 23வது படத்தில் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி வைக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கதை ரெடியாம்
சிம்புவின் 'மாநாடு', அசோக் செல்வன் நடிப்பில் 'மன்மத லீலை' என அடுத்தடுத்து இரண்டு படங்களை கொடுத்த வெங்கட்பிரபு, இப்போது நாக சைத்தன்யாவின் 22வது படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு, இளையராஜாவும் யுவனும் சேர்ந்து இசையமைத்து வருகின்றனர். நாக சைத்தன்யா படம் முடிந்ததும் சிவகார்த்திகேயன் படத்தை இயக்க வெங்கட்பிரபு ஓகே சொல்லிவிட்டாராம். ஏற்கனவே 'பிரின்ஸ்' படத்தின் திரைக்கதையை வெங்கட் பிரபு எழுதுவதாக சொல்லப்பட்டது. ஆனால், அது பிரின்ஸ் திரைக்கதை அல்ல இருவரும் இணையும் படம் தான் என்றும் இப்போது தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு கூட்டணி முதன்முறையாக இணையவுள்ளது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.