»   »  எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய்யை அடுத்து சிவகார்த்திகேயனாம்!

எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய்யை அடுத்து சிவகார்த்திகேயனாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய்யை அடுத்து குழந்தைகளை கவரும் ஹீரோ சிவகார்த்திகேயன் என பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்த ரெமோ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படம் ரிலீஸான அன்றே உலக அளவில் ரூ. 8 கோடி வசூல் செய்தது.


இதன் மூலம் ஓபனிங் கிங் நடிகர்கள் வரிசையில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.


சக்சஸ் மீட்

சக்சஸ் மீட்

ரெமோ படம் ஹிட்டாகியுள்ளதை அடுத்து சென்னையில் சக்சஸ் மீட் நடந்தது. சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட சிவா தன்னை சிலர் மிரட்டுவதாக கூறி மேடையில் அனைவர் முன்பும் அழுதுவிட்டார்.


திருப்பூர் சுப்பிரமணியம்

திருப்பூர் சுப்பிரமணியம்

சிவா அழுதது குறித்து அறிந்த ரெமோ பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் அவருக்கு போன் செய்து விபரம் கேட்டறிந்துள்ளார். சிவா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததால் அழுததாக சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


சிவா

சிவா

ரெமோ படம் ஹிட்டாக முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் தான். எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய்யை அடுத்து குழந்தைகளுக்கு பிடித்த ஹீரோ என்றால் அது சிவகார்த்திகேயன் என்கிறார் சுப்பிரமணியம்.


ரஜினி

ரஜினி

2007ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தை வாங்கி வெளியிட்டேன். அதன் பிறகு படங்கள் வெளியிடுவதை நிறுத்திவிட்டேன். இந்நிலையில் ரெமோ தயாரிப்பாளர் ராஜா என்னிடம் வந்து அனுபவமுள்ள நீங்கள் தான் இந்த படத்தை வாங்கி வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனால் படத்தை வெளியிட்டேன் என்று சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


டிக்கெட்

டிக்கெட்

கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நல்ல தியேட்டர்களில் ரெமோவை வெளியிட்டேன். டிக்கெட் விலை குறைவாக இருப்பதால் மக்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து படத்தை பார்க்கிறார்கள் என்கிறார் சுப்பிரமணியம்.


English summary
Film distributor Tirupur Subramaniam said that when it comes to entertainment and attracting kids, Sivakarthikeyan comes next to MGR, Rajinikanth and Vijay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil