»   »  என் கண் முன்னே சூப்பர் ஸ்டார் ஆனவர் சிவகார்த்திகேயன்: சமந்தா

என் கண் முன்னே சூப்பர் ஸ்டார் ஆனவர் சிவகார்த்திகேயன்: சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன் கண் முன்பு ஒரு ஸ்டார் சூப்ப ர்ஸ்டார் ஆனார் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படத்தின் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. தெலுங்கு வெளியீட்டு உரிமையை டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு பெற்றுள்ளார்.

இந்நிலையில் ரெமோ இசை வெளியீட்டு விழாவில் சமந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

சூப்பர் ஸ்டார் சிவா

சூப்பர் ஸ்டார் சிவா

நான் நடிக்க வந்ததில் இருந்து ஒரு ஸ்டார் சூப்பர் ஸ்டார் ஆனதை பார்க்கவில்லை. ஆனால் தற்போது பார்க்கிறேன். சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் ஆகியுள்ளார்.

வாழ்த்து

வாழ்த்து

சிவகார்த்திகேயனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சிவகார்த்திகேயன் ஒரு பெரிய ஸ்டாராக இருந்தாலும் மிகவும் எளிமையானவர், இனிமையானவர். அந்த காரணத்திற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.

ரெமோ

ரெமோ

ரெமோ தெலுங்கு டப்பிங் படம் போல எனக்கு தெரியவில்லை. இந்த படத்தை தில் ராஜு மற்றும் ஆர்.டி. ராஜா ஆகியோர் பெரிய அளவில் விளம்பரப்படுத்துகிறார்கள் என்றார் சமந்தா.

சிவா, கீர்த்தி

சிவா, கீர்த்தி

இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனை வாழ்த்தி நட்பு ரீதியாக கட்டியணைத்தார் சமந்தா. நிகழ்ச்சிக்கு மஞ்சள் நிற உடையில் அழகாக வந்திருந்தார் கீர்த்தி.

English summary
Actress Samantha said that she has seen a star who has become a super star and that is none other than Sivakarthikeyan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil