»   »  டீ கடை வைத்த சிவகார்த்திக்கேயன்… ஆன்டிரியாவை பிடித்த சூரி

டீ கடை வைத்த சிவகார்த்திக்கேயன்… ஆன்டிரியாவை பிடித்த சூரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி முருகன் படத்தில் நடிக்கும் சிவகார்த்திக்கேயனும், சூரியும் டீ கடை நடத்துகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி.

ஆனால் இந்தப்படத்தில் ஹீரோ சிவகார்த்திக்கேயனைப் போல காமெடியன் சூரிக்கும் புதிதாக ஒரு ஜோடி உண்டாம்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பட இயக்குனர் பொன்ராம் இயக்கும் அடுத்த படம் ‘ரஜினி முருகன்'. தனது காக்கிக் சட்டை படத்தை முடித்துவிட்டு இந்த படத்தில் பிசியாகிவிட்டார் சிவகார்த்திக்கேயன். இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பாக இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கிறார்.

டீ கடை ஓனருங்கோ

டீ கடை ஓனருங்கோ

மதுரையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் டீக்கடை உரிமையாளராக நடிக்கிறாராம். சூரி, சிவகார்த்திகேயன் இருவரும் டீக்கடை திறப்பு விழாவிற்கு போஸ்டர் அடித்து ஒட்டியது போன்று ஒரு காட்சியை சமீபத்தில் படமாக்கினார்கள்.

சிவகார்த்திக்கேயன் – கீர்த்தி சுரேஷ்

சிவகார்த்திக்கேயன் – கீர்த்தி சுரேஷ்

ரஜினி முருகனில் சிவகார்த்திக்கேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர் பிரபல நடிகை மேனகாவின் மகளாவார்.

பரோட்டா சூரி

பரோட்டா சூரி

சிவகார்த்திகேயனுடன் ஏற்கனவே, மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா போன்ற படங்களில் கமெடியில் கலக்கியிருப்பார் சூரி. இதைத் தொடர்ந்து ரஜினிமுருகன் படத்தில் படத்தில் இருவரும் நடித்து வருகின்றனர்.

சூரியின் முன்னேற்றம்

சூரியின் முன்னேற்றம்

இதில் சிவகார்த்திக்கேயனுக்கு இணையாக நடிக்கிறார் சூரி. ஆரம்பத்தில் ‘பரோட்டா' சூரி என அடையாளம் காணப்பட்ட இவர், தனது திறமையால் முன்னேறியுள்ளார். சூரி... 'கமெடியில பின்றாப்ல தம்பி.' என்று அனைவரையும் கூற வைத்துவிட்டார் என்றே கூறலாம்.

சூரிக்கு ஜோடி

சூரிக்கு ஜோடி

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஜோடி இல்லையாம், சூரிக்கும் தானாம். ஆண்ட்ரியா என்ற வெளிநாட்டுப் பெண் தான் சூரிக்கு ஜோடியாக இயக்குனர் தேர்வு செய்துள்ளாராம்.

மூவர் கூட்டணி

மூவர் கூட்டணி

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன்,சூரி, பொன்ராம் மூன்று பேரும் மீண்டும் இணைந்திருக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இப்போதே பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

English summary
Sivakarthikeyan and Soori owns Tea Shop in Rajini Murugan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil