»   »  சிவகார்த்திகேயன் விஷயத்தில் என்ன தான் நடந்தது?: தயாரிப்பாளர் தேனப்பன் விளக்கம்

சிவகார்த்திகேயன் விஷயத்தில் என்ன தான் நடந்தது?: தயாரிப்பாளர் தேனப்பன் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் அழுதது குறித்து பிரபல சினிமா தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

ரெமோ சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் சிலர் தன்னை மிரட்டுவதாகக் கூறி மேடையில் அழுதார். அவர் அழுதது பற்றி தான் கோடம்பாக்கத்தில் பேச்சாக உள்ளது.

இந்நிலையில் இது குறித்து பிரபல சினிமா தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் கூறுகையில்,

எஸ்கேப் மதன்

எஸ்கேப் மதன்

எஸ்கேப் ஆர்டிஸ்ட் பி. மதன் மற்றும் வேந்தர் மூவிஸ் மதன் ஆகியோர் புதிய படங்களுக்காக சிவகார்த்திகேயனுக்கு பெரிய தொகையை முன்பணமாக அளித்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

சிவா

சிவா

சிவகார்த்திகேயனோ தான் இரண்டு மதன்களிடமும் இருந்தும் பணம் வாங்கவே இல்லை என்று மறுத்துள்ளார். பண பரிவர்த்தனை குறித்து எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.

ரெமோ

ரெமோ

ரெமோ படத்தை வெளியிடுவதில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ரஜினி முருகனை வெளியிட தான் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டன.

சம்பளம்

சம்பளம்

ரஜினி முருகன் படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு இதுவரை சம்பளம் எதுவும் கொடுக்கவில்லை. பண விவகாரம் குறித்து தயாரிப்பாளர் கவுன்சிலில் பேசி முடிவு எடுக்கப்படும்.

விஷால், சிம்பு

விஷால், சிம்பு

சிலர் தங்களையும் மிரட்டியதாக விஷாலும், சிம்புவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

English summary
Popular producer PL Thenappan has explained about Sivakarthikeyan's issue. He said that Siva faced no issue in releasing Remo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil