»   »  விஜய், அஜித் மிஸ்ஸிங்; சிவா, கார்த்தி பங்கேற்பு... கோலாலம்பூரில் கோலாகலம்!

விஜய், அஜித் மிஸ்ஸிங்; சிவா, கார்த்தி பங்கேற்பு... கோலாலம்பூரில் கோலாகலம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மலேஷியா சென்றுள்ள ரஜினிகாந்திற்கு பிரும்மாண்ட வரவேற்பு- வீடியோ

கோலாலம்பூர் : தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடைபெற்று வருகிறது.

இதற்காக பல நடிகர், நடிகைகள், கலைக் குழுவினர் மலேசியாவிற்குப் பயணமாகியுள்ளனர்.

நேற்று முன்தினம் மலேசியாவிற்கு சுமார் 150க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் ஒரே விமானத்தில் பயணமாகி உள்ளனர்.

ரஜினிகாந்த் பங்கேற்பு

ரஜினிகாந்த் பங்கேற்பு

நடிகர் ரஜினிகாந்தும் தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன் சென்றிருக்கிறார். விமானத்திலேயே அவருடன் பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். அனைவருடனும் ரஜினிகாந்த் கலகலப்பாக பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டாராம்.

அஜித், விஜய் இல்லை

அஜித், விஜய் இல்லை

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருக்கு அடுத்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித், விஜய், இந்த கலை விழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்கள் எனத் தெரிகிறது.

சிம்புவும் கலந்துகொள்ளவில்லை

சிம்புவும் கலந்துகொள்ளவில்லை

அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை என்பதை பாலிசியாகவே வைத்திருக்கிறார். அது குறித்து பல முறை சர்ச்சைகள் எழுந்துள்ளன. சிம்பு உள்ளிட்ட சிலரும் இந்த நட்சத்திரக் கலைவிழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

விஜய் ஏன் இல்லை

விஜய் ஏன் இல்லை

இப்போது அஜித்தை போலவே விஜய்யும் நடந்து கொள்ள முடிவெடுத்துவிட்டார் என்கிறார்கள். அஜித் வராதபோது தான் மட்டும் ஏன் வர வேண்டும் என அவரும் இதைத் தவிர்ப்பதற்காக சீனாவுக்கு வேறு வேலையாகப் போயிருக்கிறாராம்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், கார்த்தி, ஆர்யா ஆகியோர் நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ளனர். அவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை நடிகர் சங்க கட்டிடம் கட்ட பயன்படுத்த உள்ளனர்.

English summary
Malaysia star arts Festival is taking place on behalf of the South Indian artiste Association. Many actors, actresses have traveled to Malaysia. More than 150 stars have traveled to Malaysia for the same flight. Actor Rajinikanth has gone with the stars of Tamil cinema. Sivakarthikeyan, Karthi and Arya have gone to participate in the star arts festival.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X