Madharaasi Box Office Prediction: புக்கிங்கில் ஸ்லோ.. பிக்கப்பில் ஜெட்.. SKவின் அடுத்த பாக்ஸ் ஆபீஸ் ஹிட்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் மதராஸி. தமிழ் மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி என படம் மொத்தம் 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் படத்தின் முதல் நாள் வசூல் எந்த அளவுக்கு இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
தர்பார் மற்றும் சிகிந்தர் படம் ஏ.ஆர். முருகதாஸ்க்கு சரியாக போகாததால் மதராஸி படத்தின் புக்கிங் கொஞ்சம் மந்தமாகத்தான் சென்றது. இதனால் பலரும் பேசிக் கொண்டது புக்கிங்கே இவ்வளவு ஸ்லோவாகவே இருக்கிறது என்றால் படம் தப்பிக்குமா என்று பலரும் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அதை எல்லாம் முதல் நாளின் முதல் காட்சி தவிடு பொடியாக மாற்றியுள்ளது.

அதாவது, படத்தின் முதல் காட்சி முடிந்த பின்னர் ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பு என்பது மொத்த படக் குழுவையும் கோலிவுட்டையும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மொத்தத்தில் படம் நன்றாக உள்ளது என்று பலரும் கூறி வருவதால் படத்தின் முதல் நாள் வசூல் என்பதே வேற லெவலில் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டு இருப்பதால், டிக்கெட் புக்கிங்கும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
புக்கிங்: படத்தின் புக்கிங்கைக் கணக்கில் பார்த்தால் அது சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை விட சற்று குறைவாகத்தான் உள்ளது. ஆனால் அமரன் படம் தீபாவளி ரிலீஸ் படம். மதராஸி அப்படி இல்லை. அதன் அடிப்படையில் பார்க்கும்போது இந்த படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு என்பது படக்குழுவினருக்கு பெருத்த நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அதாவது படம் எப்படியும் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் ரூபாய் 25 கோடிகளில் இருந்து ரூபாய் 30 கோடிகள் வரை வசூலிக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

வசூல் எதிர்பார்ப்பு: அதே நேரத்தில் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் என்பது அதிரிக்கும். இது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான அமரன் படம் உலகம் முழுவதும் ரூபாய் 350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் மதராஸி படம் ரூபாய் 300 கோடிகள் வசூலித்தாலே அது சிவகார்த்திகேயனின் பிசினஸை உயர்த்தி விட்டது என்பதற்கான சான்றாக மாறிவிடும் அந்த வகையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று இப்போதே கோலிவுட்டில் பேச்சுகள் அடிபடுகிறது. மொத்தத்தில் படம் ஏ.ஆர். முருகதாஸ்க்கு மாஸான கம்பேக், சிவகார்த்திகேயனை தரமான ஆக்ஷன் கதாநாயகனாக மாற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications











