Madharaasi Public Review: இது துப்பாக்கி 2 ப்ரோ.. SKவின் மதராஸியை கொண்டாடும் ரசிகர்கள் விமர்சனம்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படமான மதராஸி இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. சிவாவின் முந்தைய படமான அமரன் படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை இந்திய அளவில் குவித்ததால், இந்த படத்தின் மீதும் அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு உள்ளது. இப்படி இருக்கும்போது, மதராஸி படம் இன்று வெளியாகி உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி உள்ளது என்பது குறித்து தெரிவித்துள்ளார்கள்.

ரசிகர் ஒருவர் கூறும்போது, " படம் ரொம்பவே நன்றாக உள்ளது. படத்தின் திரைக்கதை அட்டகாசமாக உள்ளது. கேமராமேன் சிறப்பாக பணியாற்றி உள்ளார் என்பது படத்தை பார்க்கும்போது நன்றாக தெரிகிறது. படத்தில் வன்முறைக் காட்சிகள் உள்ளது. ஆனாலும் எல்லோரும் பார்க்கும்படியான படம் தான். கூலி படத்தை விடவும் இந்த படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம். ஆனால் படம் நன்றாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan Madharaasi Public Review Fans Celebrating SK AR Murugadoss Rukmini Vasanth
Photo Credit:

இன்னொருவர் கூறும்போது, " படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் தான். படத்தில் காமெடி என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லை. அமரனைக் கடந்து என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் அமரன் வரிசையில் இந்த படம் உள்ளது என்று கூறலாம். படத்தின் இரண்டாம் பாதியில் வித்யூத்தின் அனைத்து காட்சிகளுமே புல்லரிக்க வைத்தது. அனிருத்தின் இசை மொத்தமாகவே நன்றாக உள்ளது. முதல் பாதி காதல் கதை போல போகும். ஆனால் இரண்டாம் பாதி மொத்தமாக அனைத்தையும் மாற்றிவிடுகிறது. கதாநாயகியும் சிறப்பாக நடித்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி 2: சிவகார்த்திகேயனின் நடிப்பை பாராட்டுவதா, ஏ.ஆர். முருகதாஸின் திரைக்கதையை பாராட்டுவதா அனிருத்தின் இசையைப் பாராட்டுவதா என்று தெரியவில்லை. அமரனுக்கு பின்னர் சிவகார்த்திகேயனின் அடுத்த ஹிட் இது. படத்தை தீபாவளிக்கு இறக்கி இருந்தால் இன்னும் வேற லெவலில் ஒர்க்-அவுட் ஆகியிருக்கும். படம் முழுக்க சண்டை. படத்தின் கிளைமாக்ஸ் மொத்த படத்தையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு உள்ளது. இந்த படத்தின் கதாபாத்திரத்தை சிவகார்த்திகேயன் ஏற்று நடித்ததற்கு பாராட்டலாம் என்று ஒரு ரசிகர் படக்குழுவை மொத்தமாக பாராட்டியுள்ளார்.

Sivakarthikeyan Madharaasi Public Review Fans Celebrating SK AR Murugadoss Rukmini Vasanth
Photo Credit:

அட்டகாசம்: படத்தின் முதல் பாதி தான் கொஞ்சம் தொய்வாக இருந்தது. கதாநாயகி இண்ட்ரோ பாடல் எல்லாம் தேவையில்லாதது. ஆனால் படம் முழுக்க ரேஸியாக சென்று கொண்டுள்ளது. துப்பாக்கி, கத்தி சண்டைக் காட்சிகள் போல இந்த படத்தின் சண்டைக் காட்சிகளும் பேசப்படும். வித்யூ ஜமால் படத்தில் அட்டகாசமாக உள்ளார். அவரை ஏன் இத்தனை ஆண்டுகள் விட்டு வைத்திருந்தார்கள் என்று தெரியவில்லை. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக வித்யூவுக்கும் கத்திக் கொண்டு இருந்தார்கள் என்று ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

ஓவர் ஆக்‌ஷன்: படத்தில் முருகதாஸ் டச் உள்ளது. வழக்கமாக கதாநாயகன் தான் பேசுவார். ஆனால் இந்த படத்தில் கதாநாயகி பேசுகிறார். படம் முழுக்க ஆக்‌ஷன் நன்றாக உள்ளது. குழந்தைகள் இல்லாமல் குடும்பமாக பார்க்க பக்காவான ஆக்‌ஷன் படம்" என்று ரசிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X