Madharasi X Review: ‘மதராஸி‘யாக சிவகார்த்திகேயன் ஜெயித்தாரா? மதராஸி ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது மதராஸி திரைப்படம். அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படம் வெளியாகி இருப்பதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மதராஸி படத்தின் சிறப்பு காட்சிகள் முடிந்து படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வர தொடங்கியுள்ளன. தற்போது மதராஸி படத்தின் தமிழகத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.

படம் முழுக்க அதிரடி: மதராஸி திரைப்படம் தமிழகத்தில் சிறப்பு காட்சியாக இன்று காலை 9 மணிக்கு தியேட்டரில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். படம் பார்த்த இணையவாசி ஒருவர், முதல் பாதி நன்றாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் ஏற்ற இறக்கங்கள் கலந்திருக்கிறது. ஆனால், படம் முழுக்க அதிரடியாக இருக்கிறது. அதிரடியான சண்டை காட்சிகளை விரும்புபவர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக இருக்கும். உணர்ச்சிபூர்வமான படமாக இருக்கிறது. படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் உள்ளன. இருந்தாலும், இந்த ஆண்டின் ஒரு நல்லபொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
சிறப்பான படம்: மதராஸி படம் பார்த்த இணையவாசி ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், படத்திற்கு 2½/5 மதிப்பீடு அளித்துள்ளார். படம் பார்ப்பதற்கு விறுவிறுப்பாக மற்றும் கலர்புல்லாக இருக்கிறது. மேலும், வில்லன் வித்யுத் வரும் காட்சியும், சண்டை காட்சியும் சூப்பர். மாலதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ருக்மிணி தனது பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். மொத்தத்தில் மதராஸி திரைப்படம் சிறப்பாக உள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இஸ்ட் கம்பேக்: படம் பார்த்த மற்றொரு இணையவாசி, மதராஸி படத்திற்கு 5க்கு 3.5 மதிப்பெண் அளித்துள்ளார். படம் அனைவரும் பார்க்கக்கூடிய ஒரு கமர்ஷில் பொழுதுபோக்கு படம். படத்தில் காதல், அதிரடி சண்டை, வில்லன் வித்யுத் ஜம்வால் என்ட்ரி என அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது. அனிருத்தின் இசை படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது. மதராஸி திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸின் கம்பேக் படம் என பதிவிட்டுள்ளார்.
நல்ல படம்: எஸ்கே மற்றும் ருக்மணியின் நடிப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, எஸ்கே குறிப்பாக பல காட்சிகளில் அதிரடி காட்டி உள்ளார். ஆக்ஷன் காட்சிகளும், ஒளிப்பதிவும் அபாரம். முதல் பாதியை விட, இரண்டாம் பாதி நன்றாக இருந்தது. படத்தில் சில லாஜிக் குறைகள் மற்றும் சில குறைகள் உள்ளன. ஆனால், ஒட்டுமொத்தமாக படத்தைபார்க்கும் போது, படம் மிகவும் ஈர்க்கக்கூடியதாகவும் பொழுதுபோக்கு அம்சமாகவும் உள்ளது.
எரிச்சலூட்டுகள் காட்சிகள்: மற்றொரு இணையவாசி, மதராஸி படத்தி ஏற்றுக்கொள்ள முடியாத பல காட்சிகள் உள்ளன. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை விறுவிறுப்பாக பல முயற்சிகளை செய்து இருக்கிறார். ஆனால் மந்தமான எழுத்தால் கதையால் ஏமாற்றமளிக்கிறது. படத்தில் தொடர்ந்து மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் அலறல் மற்றும் பில்ட்அப் பார்வையாளர்களை எரிச்சலடையச் செய்கிறது என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











