»   »  பப்ளிக்கில் சூரியின் மானத்தை வாங்கிய சிவகார்த்திகேயன்

பப்ளிக்கில் சூரியின் மானத்தை வாங்கிய சிவகார்த்திகேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சூரியின் ஹோட்டலை திறக்க ராஜஸ்தானில் இருந்து வந்த சிவகார்த்திகேயன்!- வீடியோ

சென்னை: பப்ளிக்காக சூரியை மரண கலாய் கலாய்த்துள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனும், சூரியும் அண்ணன்-தம்பியாக பழகி வருகிறார்கள். திரையில் இருவரும் சேர்ந்து வந்து காமெடி செய்தால் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

சூரி தற்போது கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்தி

கார்த்தி

சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி விவசாயியாக நடிக்கும் படம் தான் கடைக்குட்டி சிங்கம். இந்த படத்தை சின்ன பாபு என்ற தலைப்பில் தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

புகைப்படம்

கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூரி கிராமத்து பாட்டிகளுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். செல்ல அப்பத்தாக்களோடு ஒரு செல்ஃபி என்று ட்வீட்டியுள்ளார் அவர்.

சிவகார்த்திகேயன்

சூரியின் அப்பத்தா செல்ஃபியை பார்த்த சிவகார்த்திகேயனால் கலாய்ககாமல் இருக்க முடியவில்லை. என்ன சூரிண்ணே கூடப்படித்தவர்களுடன் கெட்டுகெதரா என்று கேட்டு கலாய்த்துள்ளார் சிவா.

கிளாஸ்மேட்ஸ்

கூடப்படித்தவர்கள் தான் ஆனால் என்னுடன் இல்லை எங்க அப்பாவுடன் பங்கு என்று சிவகார்த்திகேயனுக்கு கவுண்ட்டர் கொடுத்துள்ளார் சூரி.

English summary
Sivakarthikeyan has made fun of his co-star Soori who posted a selfie on twitter. Soori took a selfie with old ladies while shooting for his upcoming movie Kadaikutty Singam with Karthi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil