»   »  பொது இடங்களில் கவனமாக இருங்கள்... சிவகார்த்திகேயனுக்கு அறிவுரை வழங்கிய அஜீத்

பொது இடங்களில் கவனமாக இருங்கள்... சிவகார்த்திகேயனுக்கு அறிவுரை வழங்கிய அஜீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜீத் மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவாவை வேதாளம் படப்பிடிப்பில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்த சந்திப்பின் போது சிவகார்த்திகேயன் நடிப்பைப் பாராட்டிய அஜீத் அவருடைய எதிர்கால வளர்ச்சிக்காக சில அறிவுரைகளையும் வழங்கி இருக்கிறார்.

இந்த சந்திப்பின்போது மதுரை பிரச்சினையில் என்ன நடந்தது என்பது பற்றி கேட்டுத் தெரிந்து கொண்ட அஜீத், பொது இடத்தில் மிகவும் கவனம் தேவை கொஞ்சம் பார்த்து இருங்கள் என அறிவுரை கூறினாராம்.

மேலும் சிவகார்த்திகேயன் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவிருப்பதால் அந்தப் படம் எப்போது தொடங்கவிருக்கிறது, தயாரிப்புப் பணிகள் எந்த நிலையில் இருக்கின்றன போன்ற விவரங்களையும் அஜீத் ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார்.

இந்த சந்திப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் "அஜீத் சாருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன், இந்த சந்திப்பை என்னால் என்றும் மறக்க முடியாது.

இந்த சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்த சுரேஷ் சந்திரா சாருக்கு நன்றி, வேதாளம் படக்குழுவினர் மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவாவுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக ஒருமுறை நடிகர் சிவகார்த்திகேயன் அஜீத்தை சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.

English summary
Recently Actor Sivakarthikeyan Meets Ajith in Vedhalam Shooting Spot. he took twitter and wrote "Got tis Pic wit Thala Memorable meeting.Thnx SureshChandraa Sir..Bestwishes directorsiva sir 4 #vedhalamteaser".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil