அஜித்துடன் திடீர் சந்திப்பு நடத்திய சிவகார்த்திகேயன்.. ஜெயிலர், துணிவு ஒரே இடத்துல ஷூட்டிங்!

சென்னை: ரஜினிகாந்தின் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் வெளியான நிலையில், ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய ரோலில் நடிக்கிறாரா என கேள்விகள் கிளம்பின.

இந்நிலையில், திடீரென அஜித்துடன் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நிலையில், ஜெயிலர், துணிவு இரு படங்களும் ஒரே இடத்தில் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்யையும் சந்தித்து சிவகார்த்திகேயன் போட்டோ எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அஜித் படத்தில் அறிமுகம்

அஜித் படத்தில் அறிமுகம்

தனுஷின் 3 படத்தில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே அஜித்தின் ஏகன் படத்தில் அடையாளமே தெரியாமல் ஒரு சின்ன ரோலில் சிவகார்த்திகேயன் புத்தகங்களை சுமந்து கொண்டு செல்வார். அப்போதிலிருந்தே அவர் அஜித் ரசிகர் என்றும் தனது மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட படங்களில் நமக்கு தல தான் முக்கியம் என வசனங்கள் வைத்து அதை நிரூபித்து இருந்தார்.

அஜித்துடன் சந்திப்பு

அஜித்துடன் சந்திப்பு

கோலிவுட்டின் இளம் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது அஜித்தை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து போட்டுள்ள ட்வீட் அஜித் ரசிகர்களையும் சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

பாசிட்டிவான வார்த்தைக்கு நன்றி

பாசிட்டிவான வார்த்தைக்கு நன்றி

நீண்ட நாள் கழித்து ஏகே சாரை மீண்டும் சந்தித்துள்ளேன். அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டதும், அவர் சொன்ன பாசிட்டிவான வார்த்தைகளுக்கும் ரொம்ப நன்றி என கேப்ஷன் கொடுத்து அந்த புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

ஜெயிலர் ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன்

ஜெயிலர் ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன்

இயக்குநர் நெல்சனின் டாக்டர் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் சென்று விஜய்யுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்நிலையில், சமீபத்தில் ஜெயிலர் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சிவராஜ்குமார் உடன் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட புகைப்படம் டிரெண்டானது. மேலும், ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்கிறாரா? என்கிற கேள்விகளும் கிளம்பின.

ஒரே இடத்தில் படப்பிடிப்பு

ஒரே இடத்தில் படப்பிடிப்பு

ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் அஜித்தின் துணிவு என இரண்டு படங்களின் படப்பிடிபுகளுமே சென்னையில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அஜித் - ரஜினி சந்திப்பு நிகழுமா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் - அஜித் சந்திப்பு நடைபெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் பிஸி

சிவகார்த்திகேயன் பிஸி

ஒரு பக்கம் மாவீரன் படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் மீண்டும் அயலான் படத்தை ஆரம்பித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதற்கிடையே ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் அஜித்தையும் சந்தித்து இருப்பது ஏதோ வெயிட்டா செய்ய போகிறார் என்கிற எண்ணத்தை தோன்ற வைத்துள்ளது.

துணிவு பொங்கல்

துணிவு பொங்கல்

வரும் பொங்கல் பண்டிகைக்கு போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு தமிழ்நாட்டில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு படத்துடன் துணிவு மோத உள்ள நிலையில், இந்த பொங்கல் கிளாஷ் பாக்ஸ் ஆபிஸ் கிங் யாரு என்பதை நிரூபிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X