Don't Miss!
- News
தொழுகை செய்யும் போது கொல்வதா? இந்தியாவில் கூட "இப்படி" நடக்காது.. பாக். அமைச்சர் திமிர் பேச்சு
- Technology
அண்ணாந்து பார்க்கும் ஆப்பிள்! மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அட்ராசக்க! லெஜண்ட் கவுண்டமணியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு; வைரலாகும் புகைப்படம்!
சென்னை: 82 வயதாகும் காமெடி லெஜண்ட் கவுண்டமணியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் திடீரென சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து கவுண்டமணி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளார்.
திரையரங்குகள் திறப்பு… எதிர்பார்த்த கூட்டம் இல்லை… புதுபடங்களுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் !
அவருடன் செலவிட்ட ஒரு நாள் வாழ்வில் மறக்கவே முடியாத தருணங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

அசுர வளர்ச்சி
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காமெடியனாக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக ஏகப்பட்ட ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தார். தனுஷின் 3, பாண்டிராஜின் மெரினா படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அப்படியே படிப்படியாக ஹீரோவான அவர் இன்று அதிக சம்பளம் வாங்கும் டாப் கோலிவுட் நடிகர்களில் ஒருவராக கலக்கி வருகிறார்.

குழந்தைகளின் ஃபேவரைட்
விஜய் டிவி மேடையிலேயே நடிகர் விஜய் சிவகார்த்திகேயனை பாராட்டிய தருணங்கள் இன்னமும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருக்கும். குழந்தைகளின் ஃபேவரைட்டாக இன்றும் இருக்கும் நடிகர் விஜய்யே, நீ குழந்தைகளின் மனசை புடிச்சிட்ட என பாராட்டியது சிவகார்த்திகேயனை பக்கா கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியது.

டாக்டர் ரிலீஸ் எப்போ
ஒடிடியா? டிவியா? அல்லது தியேட்டரா? என இன்னமும் குழப்பத்திலேயே இருக்கிறது சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ். கொரோனா, தேர்தல் என தள்ளிப் போடப்பட்ட இயக்குநர் நெல்சனின் அந்த படம் பீஸ்ட் படத்திற்கு முன்பாக ரிலீஸ் ஆகுமா? அல்லது பீஸ்ட் முந்தி விடுமா? என்கிற ரேஞ்சில் இருக்கிறது.

அயலானுக்கும் வெயிட்டிங்
டாக்டர் படத்திற்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் ஏலியன் படம் அயலானும் இன்னமும் வெளியாகவில்லை. தயாரிப்பு தரப்பு பிரச்சனை காரணமாக பல மாதங்கள் கிடப்பில் கிடந்த அந்த படம் மீண்டும் எடுக்கப்பட்டு படப்பிடிப்புகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டும் இன்னமும் ரிலீஸ் குறித்த எந்த அறிகுறியும் தெரியாமல் இருக்கிறது.

கவுண்டமணியுடன் சந்திப்பு
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் திடீரென காமெடி லெஜண்ட் கவுண்டமணியை சந்தித்துள்ளார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, ஏகப்பட்ட கவுண்டமணி ரசிகர்கள் தங்கள் தலைவரை மீண்டும் பார்த்த சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து வருகின்றனர்.

புதுக் கூட்டணியா?
காமெடி நடிகர் கவுண்டமணியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்து ஒரு நாள் முழுவதும் அவருடன் பேசியுள்ள தகவல் அறிந்ததும், அண்ணே உங்க அடுத்த படத்தில் கவுண்டமணி சார் நடிக்கிறாரா? என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட்டுகளில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்படி அட்ராசக்க விஷயம் ஏதும் நடந்தால் விரைவில் மிகப்பெரிய அறிவிப்பு சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்தே வெளியாகும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

அட்ராசக்க
"ரொம்ப நாள் கழிச்சு திரு.கவுண்டமணி அவர்களை இந்த நிழற்படம் மூலம் எங்களுக்கு காட்டியதில் மகிழ்ச்சி.. கவுண்டர் பாணில சொல்லனும்னா அட்ராசக்க.. அட்ராசக்க.. அட்ராசக்க.." என கவுண்டமணியின் ஜிஃப் இமேஜையே போட்டு ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

டானுக்கே டான்
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டானுக்கே டான் இவர் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர். டான் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் ஒரே ஒரு சீனில் கவுண்டமணி வந்து சென்றாலும் அது அந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்பது ரசிகர்களின் கோரிக்கை.