»   »  ரெமோவுக்குப் பிறகு... சிவகார்த்திகேயனின் புது டீம் இது!

ரெமோவுக்குப் பிறகு... சிவகார்த்திகேயனின் புது டீம் இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரெமோ படத்துக்குப் பிறகு மோகன் ராஜாவுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்துக்கான நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரத்தை வெளியிட்டுள்ளனர்.

'ரெமோ' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜாவின் அடுத்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

Sivakarthikeyan Movie Cast&Crew Details

மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் அவருக்கு வில்லனாக மலையாள நடிகர் பஹத் பாசிலும் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தில் பணியாற்றும் பிற கலைஞர்கள்:

இசையமைப்பாளராக அனிருத், கலை இயக்குநராக முத்துராஜ், ஒளிப்பதிவாளராக ராம்ஜி, எடிட்டராக விவேக் ஹர்சன்,சண்டைப் பயிற்சியாளராக அனல் அரசு, இசை வடிவமைப்பாளர்களாக விஷ்ணு கோவிந்த் மற்றும் ஸ்ரீசங்கர், விளம்பர வடிவமைப்பாளராக ட்யூனி ஜான் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

ரெமோ படத்திற்குப் பின் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தின் மூலம் அனிருத், சிவகார்த்திகேயனுடன் 6 வது முறையாகவும், நயன்தாரா, பகத் பாசில் முதன்முறையாகவும் கூட்டணி அமைத்துள்ளனர்.

நயன்தாரா, பகத் பாசில் என முன்னணி நடிக, நடிகையருடன் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

English summary
Sivakarthikeyan Next Movie Cast&Crew Details.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil