»   »  'ரெமோ'வைத் தொடர்ந்து மோகன் ராஜாவுடன் கைகோர்த்த சிவகார்த்தி

'ரெமோ'வைத் தொடர்ந்து மோகன் ராஜாவுடன் கைகோர்த்த சிவகார்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் - மோகன்ராஜா கூட்டணியில் உருவாகும் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.

கடந்த வருடம் வெளியான தனி ஒருவன் படத்தைத் தொடர்ந்து மோகன்ராஜாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

Sivakarthikeyan Next Movie Pooja

இந்நிலையில் மோகன் ராஜா யாரும் எதிர்பாராவண்ணம் காமெடி நடிகர் சிவகார்த்தியுடன் கைகோர்த்தார். இது கோலிவுட்டில் பல ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியது.

தற்போது இந்தக் கூட்டணியின் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. இதில் சிவகார்த்திகேயன், மோகன்ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

சிவகார்த்திகேயன் தற்போது பாக்யராஜ் கண்ணனின் ரெமோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிவாவின் நண்பர் ராஜா தனது 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் -மோகன் ராஜா படத்தையும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது. ரஜினிமுருகன், தனி ஒருவன் என 2 பேருமே வெற்றிகளைக் கொடுத்திருப்பதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

English summary
Sivakarthikeyan- Mohanraja Untitled Movie Held Pooja on Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil