»   »  மக்களே உங்களுக்கோர் நற்செய்தி.. "ரெமோ".. இதுதாங்க நம்ம "ரஜினி முருகனின்" அடுத்த படப் பெயர்!

மக்களே உங்களுக்கோர் நற்செய்தி.. "ரெமோ".. இதுதாங்க நம்ம "ரஜினி முருகனின்" அடுத்த படப் பெயர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கு அந்நியன் பாணியில் ரெமோ என்று பெயர் வைத்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து வரும் புதிய படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரசூல் பூக்குட்டி, பி.சி.ஸ்ரீராம் என்று முன்னணி கலைஞர்கள் பணியாற்றி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 24ஏஎம் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தனர்.

அதன்படி சற்று முன்னர் இப்படத்திற்கு ரெமோ என்று தலைப்பு வைத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.இந்தப் பெயரை ஏற்கனவே அந்நியன் படத்தில் விக்ரம் உபயோகப்படுத்தியிருந்தார்.

இதனால் இப்படம் இளைஞர்களைக் கவரும் விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இப்படத்திற்கு நர்ஸ் அக்கா என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Sivakarthikeyan Next Movie Titled as Remo. 24AM Studios Tweeted "Proud to announce TITLE of 24AMSTUDIOS's 1st production Here now, its open to the world..."REMO".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil