Just In
- 2 hrs ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 7 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 7 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 8 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- News
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.. சென்னைக்குள் என்ட்ரியாக முடியாமல் பரிதவிக்க வைத்த டிராபிக் ஜாம்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹாட்ரிக் வெற்றி கன்பார்ம்... மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்கும் பாண்டிராஜ்!
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயனும், இயக்குனர் பாண்டிராஜும் மீண்டும் இணைகின்றனர்.
தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த சிவகார்த்திகேயனை, தனது மெரினா படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ். இதையடுத்து, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் சிவாகார்த்திகேயன் நடித்தார். அதன் பிறகு இருவருவம் சேர்ந்து படம் பண்ணவில்லை.

மெரினா படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்த சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். அதேபோல் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் பாண்டிராஜின் அடுத்த படம் குறித்து கோலிவுட் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
With all your whishes & blessings I am Happy to share that my next project is with @sunpictures & My Lovely Brother @Siva_Kartikeyan 🙏👍 https://t.co/igCVSMh2Sv
— Pandiraj (@pandiraj_dir) March 8, 2019
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளதாக பாண்டிராஜ் அறிவித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை அடுத்து, இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் படத்தில் சிவா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளையராஜா 75.. மேடையிலேயே திட்டிய இளையராஜா.. ஒரு மாதத்திற்குப் பின் விளக்கம் தரும் நடிகை ரோகிணி!
படம் தற்போது ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது. சிவகார்த்திகேயனுடன் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இது சன் பிக்சர்ஸ் படம் என்பதால், ஒவ்வொரு அறிவிப்பையும் அவர்கள் தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.