சுதா கொங்கரா மைண்ட்ல நினைக்கிறதே அப்படியே சொல்றேன்.. சிவகார்த்திகேயன் செம கலாய்!
சென்னை: சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக இன்று நடைபெற்ற ரவி மோகன் ஸ்டூடியோஸ் தொடக்க விழாவில் கலந்துக் கொண்டனர்.
தொகுப்பாளினி பாவனா ஸ்டேஜ் ரெடியாகும் வரை நிகழ்ச்சியை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என நினைத்த நிலையில், எஸ்.ஜே. சூர்யாவிடம் மைக் நீட்டி மைண்ட் வாய்ஸ் கேம் விளையாட அழைத்தார். ஆனால், சின்ன புள்ளத் தனமா நீ கேள்வி கேட்கிற என எஸ்.ஜே. சூர்யா சொல்லிவிட்டு பெரிய மனுஷத் தன்மையா நான் பதில் சொல்றேன் என கேமை சரியாக விளையாடாமல் கார்த்தியை காட்டிய உடனே சர்தார் 2 படம் பற்றிய விஷயங்களை பேசினார்.

அதன் பின்னர் சிவகார்த்திகேயன் முகத்தை காட்டியதும் அவர் என்னோட டான், இப்போ மதராஸியாக கலக்க காத்திருக்கும் பராசக்தி என மீண்டும் வாழ்த்து மடல் வாசிக்க அங்கிருந்து சிவகார்த்திகேயன் பக்கம் சென்று அவரது உதவியை பாவனா நாடியதும் உடனடியாக காம்பேராகவே மாறி கலக்கினார் சிவகார்த்திகேயன்.
மைண்ட் வாய்ஸ் கேம் ஆடிய சிவகார்த்திகேயன்: ரவி மோகன் முகத்தை காட்டி அவர் மைண்ட்ல இப்போ என்ன ஓடுதுன்னு சிவகார்த்திகேயனிடம் கேட்க சட்டென தயாரிப்பாளராக மாறிட்டோம், இன்றைக்கு நிகழ்ச்சி முடியுற வரைக்கும் அப்படியே சிரித்த முகமாக வைத்துக் கொண்டு மெயின்டெயின் பண்ணுவோம் என்றார். ஐயோ சிவா அதைத்தான் நினைச்சேன் என ரவி மோகனும் தம்ப்ஸ் அப் காட்டினார். இங்குள்ள பலரது மைண்ட் வாய்ஸை அப்படியே சொன்னால் நல்லா இருக்காதே, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி நினைப்பாங்களே என்று வெளிப்படையாக பேச அரங்கமே அதிர்ந்துவிட்டது.
சுதா மேம் மைண்ட் வாய்ஸ் சொல்லட்டா: எங்களோட டைரக்டர் சுதா மேம் மைண்ட்ல இப்போ என்ன ஓடுதுன்னு சொல்றேன் அவங்க ஃபேஸுக்கு மட்டும் க்ளோஸ் அப் வைங்க என்றதும் மாஸ்க் போட்டுக் கொண்டு இருந்த சுதா கொங்கரா ஐயோ வேண்டாம் என சொல்லிவிட்டார். இன்னும் எங்களோட பராசக்தி படம் ஷூட்டிங் பேலன்ஸ் இருக்கு, அவரோட மைண்ட்ல அதுமட்டும் தான் இருக்கு என கலகலப்பாக பேசி நிகழ்ச்சியை சரவெடியாக ஆரம்பித்து வைத்தார்.


Click it and Unblock the Notifications











