அந்த அரியணையை ஐஸ்வர்யா ராய் பார்க்கும் காட்சி.. பொன்னியின் செல்வனை சிலாகித்த சிவகார்த்திகேயன்!

சென்னை: எந்தவொரு படம் வந்தாலும், உடனடியாக முதல் ஆளாக பாராட்டி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு வந்த நிலையில், இன்னமும் படத்தை பார்த்து விட்டு ஒரு வார்த்தைக் கூட பாராட்டவில்லை என்கிற பேச்சுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் படம் வெளியாகும் முன்னே வாழ்த்தியும் தற்போது படம் பார்த்து விட்டு சிலாகித்தும் ட்வீட் போட்டிருப்பது பொன்னியின் செல்வன் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரஜினி வாழ்த்தல

ரஜினி வாழ்த்தல

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க தன்னை ஜெயலலிதா பரிந்துரைத்தார் என்றும் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் கேமியோவாக கூட நடிக்கிறேன் என்று சொல்லியும் மணிரத்னம் வேண்டாம் என மறுத்து விட்டார் என பேசிய ரஜினிகாந்த் இன்னமும் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து விட்டு வாழ்த்தி ட்வீட் ஏதும் போடவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வாய்ஸ் கொடுத்த கமல்

வாய்ஸ் கொடுத்த கமல்

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்துக்கு வாய்ஸ் கொடுத்த கமல்ஹாசனும் படம் ரிலீஸான பிறகு எந்தவொரு வாழ்த்தோ, பாராட்டோ தெரிவிக்கவில்லை. விக்ரம் படத்தின் வெற்றிக்கு ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியும் ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஷூட்டிங்கில் பிசி

ஷூட்டிங்கில் பிசி

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பிலும், கமல்ஹாசன் பிக் பாஸ் மற்றும் இந்தியன் 2 ஷூட்டிங்கிலும் படு பிசியாக இருப்பதால் இன்னமும் பொன்னியின் செல்வன் படம் பார்க்க நேரம் கிடைக்கவில்லை என்றும், இயக்குநர் மணிரத்னம் இவர்கள் இருவருக்கும் ஸ்பெஷல் ஷோ போடவில்லை என்றும் ஏகப்பட்ட பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

சிவகார்த்திகேயன் பாராட்டு

சிவகார்த்திகேயன் பாராட்டு

இந்நிலையில், தமிழ் சினிமாவில் எந்த படம் வந்தாலும், முதல் ஆளாக சென்று பாராட்டும் நடிகர் சிவகார்த்திகேயன் பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆகும் முன்பே வாழ்த்தி ட்வீட் போட்ட நிலையில், இன்று படத்தை பார்த்து விட்டு வெகுவாக பாராட்டித் தள்ளி உள்ளார்.

அரியணைக்கு ஆசைப்படும் ஐஸ்

அரியணைக்கு ஆசைப்படும் ஐஸ்

அரியணையில் தான் இருப்பதை போல நந்தினி ஐஸ்வர்யா ராய் நினைத்துப் பார்க்கும் காட்சி வேறலெவல். பொன்னியின் செல்வன் கதையை நமக்கு கொடுத்த கல்கிக்கும் அதை படமாக எடுத்த இயக்குநர் மணிரத்னத்துக்கும் படத்தில் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்த சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ் என ஒட்டுமொத்த படக்குழுவையே டேக் செய்து பாராட்டி உள்ளார்.

தீபாவளிக்கு பிரின்ஸ்

தீபாவளிக்கு பிரின்ஸ்

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ம் தேதி சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. டோலிவுட் இயக்குநர் அனுதீப் கே.வி. இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா நடித்துள்ளார். அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே வெளியான இரு பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகி உள்ளன. விரைவில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X