»   »  ப்ரோ.. நீங்க வேற லெவல்.. "கபாலி" ரஞ்சித்தை புகழ்ந்து தள்ளும் சிவகார்த்திகேன்

ப்ரோ.. நீங்க வேற லெவல்.. "கபாலி" ரஞ்சித்தை புகழ்ந்து தள்ளும் சிவகார்த்திகேன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: "கபாலி" ரஞ்சித்தை புகழ்ந்து தள்ளியுள்ளார் "ரஜினி முருகன்" சிவகார்த்திகேயன்.. நீங்க வேற லெவல் என்றும் பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் ஸ்டாராக உருவெடுத்திருப்பவர் சிவகார்த்திகேன் தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த அவர் ரஜினி முருகன் மூலம் எங்கேயோ போய் விட்டார்.


இப்போது விறுவிறுப்பாக நடித்து வரும் சிவகார்த்திகேயன், இயக்குநர் பா. ரஞ்சித்தை வெகுவாகப் பாராட்டி டிவிட் போட்டுள்ளார்.


ரஜினி ரசிகர்...

ரஜினி ரசிகர்...

சிவகார்த்திகேயன் அடிப்படையில் ஒரு ரஜினி ரசிகர். இதற்காக எதிர்த் தரப்பிடம் கூட சமீபத்தில் கண்டனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டார்.
கபாலி...

கபாலி...

தற்போது கபாலி படத்தை வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். கபாலி படம் தொடர்பாக தொடர்ந்து டிவிட்டரில் கருத்துக்களையும் கூறி வருகிறார்.


போஸ்டர்...

போஸ்டர்...

இந்த நிலையில் கபாலி படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதைப் பார்த்து பிற ரசிகர்களைப் போலவே சிவகார்த்திகேயனும் மெர்சலாகி விட்டார் போலும்.


பாராட்டு...

இயக்குநர் பா. ரஞ்சித்தைப் பாராட்டி ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில், 'ப்ரோ நீங்க வேற லெவல், கபாலி படத்தைப் பார்க்க காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.


English summary
Actor Sivakarthikeyan has praised director Ranjith for his upcoming film Rajini starrer Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil