பிரிட்டிஷ் பொண்ணை பிரின்ஸ் காதலிக்க இதுதான் காரணமா.. தீபாவளிக்கு தியேட்டரில் சரவெடி தான் போங்க!
சென்னை: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் செம காமெடியான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
டாக்டர் படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகும் நிலையில், அதே நாளில் தனது பிரின்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடத்தி உள்ளார்.
பிரின்ஸ் படத்தின் தெலுங்கு டிரைலரை மாலத்தீவில் இருந்தபடி விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஹாட்ரிக்கிற்கு ரெடி
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்த டாக்டர் படம் 100 கோடி கிளப்பில் இணைந்து சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த ஆண்டு வெளியான டான் திரைப்படமும் 100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில், அடுத்த ஹாட்ரிக்கிற்காக தீபாவளிக்கு பிரின்ஸ் படத்தை வெளியிட காத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

பிரின்ஸ் டிரைலர் ரிலீஸ்
டாக்டர் படம் வெளியாகி சரியாக ஓராண்டு கடந்த நிலையில், பிரின்ஸ் படத்தின் டிரைலரை வெளியிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். பலருக்கும் 9ம் நம்பர் லக்கி என்பதால் அக்டோபர் 9ம் தேதி தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் சற்று முன் டிரைலரை வெளியிட்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டா ரிலீஸ்
தெலுஞ்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு பைலிங்குவல் படத்தில் நடித்துள்ள நிலையில், டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரின்ஸ் படத்தை பிரபலப்படுத்த நடிகர் விஜய் தேவரகொண்டா பிரின்ஸ் தெலுங்கு டிரைலரை வெளியிட்டுள்ளார். மாலத்தீவில் விடுமுறைக்கு சென்றாலும், பிரின்ஸ் டிரைலரை ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சத்யராஜ் சேட்டை
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இருந்து சிவகார்த்திகேயனுக்கு வெற்றிமுகம் ஆரம்பித்தது. இந்நிலையில், மீண்டும் சத்யராஜ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடித்துள்ளார். எல்லோர் ரத்தமும் சிவப்பு என்பதை நிரூபிக்க அருவா எடுத்து கையை வெட்டுவதில் இருந்து செம சேட்டை செய்துள்ளார் சத்யராஜ்.

பிரிட்டிஷ் பொண்ணு ஏன்
உக்ரைன் நாட்டு மாடல் அழகியான மரியா இந்த படத்தில் தங்க தாஜ்மகால் ஆக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் பிரிட்டிஷ் பெண்ணாக வரும் அவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நடக்கும் காதலும், அதன் மூலம் வரும் எதிர்ப்புகளும் தான் கதை என்பது புரிகிறது. பிரிட்டிஷ் பொண்ண ஏன் லவ் பண்ற இந்தியவோட எந்த பெருமையையும் நீ மதிக்கல என ஊர் மக்கள் கொதித்தெழ, ஆல் இந்தியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என செய்த சத்தியத்தை காப்பாற்றத்தான் பிரிட்டிஷ் பொண்ணை காதலிக்கிறேன் என சிவகார்த்திகேயன் சொல்லும் இடங்களில் எல்லாம் தியேட்டரில் வேறலெவல் காமெடி சரவெடி கன்ஃபார்ம்.


Click it and Unblock the Notifications











