தலைவர் 169 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இப்படியொரு வாய்ப்பா? லிரிக்ஸ்லாம் இல்லை.. அதுக்கும் மேல!

சென்னை: விஜய் டிவியில் இருந்தே இயக்குநர் நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் நட்பு தொடர்ந்து வரும் நிலையில், அவர் இயக்கத்தில் உருவாகும் படங்களில் சிவகார்த்திகேயன் பாடல்களை எழுதி வருகிறார்.

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்திலும் சிவகார்த்திகேயன் அரபிக் குத்து என்கிற பாடலை எழுதியுள்ளார்.

இந்நிலையில், தலைவர் 169 படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கப் போகிறார் என்றதும் ரஜினிகாந்த் படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதுவார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இன்னொரு சூப்பரான சீக்ரெட் ஒன்று கசிந்துள்ளது.

ரஜினி ரசிகர்

ரஜினி ரசிகர்

நடிகர் சிவகார்த்திகேயன் எந்தளவுக்கு தீவிர ரஜினி ரசிகர் என்பது ஒட்டுமொத்த சினிமா உலகிற்கும் தெரிந்த ஒன்று தான். ரஜினி முருகன் என்கிற டைட்டிலில் ஒரு படமே நடித்து அது மிகப்பெரிய ஹிட் அடித்ததும் கோலிவுட் அறிந்த உண்மை தான். ரஜினிகாந்த் போலவே மிமிக்ரி பேசி அசத்துவதிலும் சிவகார்த்திகேயன் கில்லாடி.

அண்ணன் நெல்சன்

அண்ணன் நெல்சன்

விஜய் டிவியில் இருந்தே இயக்குநர் நெல்சன் உடன் நட்பு பாராட்டி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அன்போடு அவரை அண்ணன் என்றே அழைத்து வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என இவர்கள் உறவு தொடர்ந்து கொண்டே போகும் நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் இயக்கப் போகும் படத்தில் மட்டும் தொடராதா என்ன? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நான் தான் லிரிசிஸ்ட்

நான் தான் லிரிசிஸ்ட்

தலைவர் 169 படத்தின் அறிவிப்பை அட்டகாசமாக சன் பிக்சர்ஸ் வெளியிட்ட நிலையில், அடுத்த பேச்சாக அப்போ இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி விடுவார் என்கிற பேச்சுத்தான் ஒட்டுமொத்த கோடம்பாக்கம் முழுவதும் ஒலித்து வருகிறது. ஆனால், இதில் சிறப்பான ட்விஸ்ட் என்னவென்றால் தலைவர் 169 படத்திற்கு சிவகார்த்திகேயன் பாடல்களை எழுதப் போவது இல்லையாம்.

அதுக்கும் மேல

அதுக்கும் மேல

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர விசிறியான சிவகார்த்திகேயனுக்கு இந்த படத்தில் வெறும் பாடலாசிரியராக மட்டும் இல்லாமல் எப்படியாவது ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து விட வேண்டும் என இயக்குநர் நெல்சன் மைண்டில் வைத்திருந்ததை தற்போது செயல்படுத்தவும் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ன ரோல்

என்ன ரோல்

தலைவர் 169 படம் முழுவதும் வரும் கதாபாத்திரமாக இல்லாமல், ஒரு ஸ்பெஷல் கேமியோவாக சிவகார்த்திகேயன் வந்து செல்வார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம், சிங்கப்பாதை, தெலுங்கு படம் என படு பிசியாக உள்ள நிலையில், பெரிய கதாபாத்திரமாக அல்லாமல் ஸ்பெஷல் கேமியோவாக வரீங்களா என கேட்டதும் நெல்சன் அண்ணா தேங்ஸ் அண்ணான்னு சிவா சொல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பான அறிவிப்பு உரிய நேரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X