For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவகார்த்திகேயனுக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா வாழ்

|

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் மூன்றாவது தயாரிப்பான வாழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து அடுத்த கட்டமாக படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இவர் ஏற்கனவே கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் பாடகராகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் பல நிலைகளில் பல பணிகளை செய்து வருகிறார். அவர் தன் படத்தை தவிர்த்து மற்ற படங்களிலும் பாடி வருகிறார். கடைசியாக சிக்சர் படத்தில் வைபவ்விற்காக ஒரு பாடலை பாடி இருந்தார்.

Sivakarthikeyan’s 3rd Production Vaazhl movie dubbing started

இவர் எஸ்.கே ப்ரெடக்‌ஷன் என்கிற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து ரிலீஸ் செய்து வருகிறார். சென்ற ஆண்டு வெளியான கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயங்கியிருந்த கனா திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வியாபார ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

பின்னர் சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்தார். இந்த படமும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இசை வெளியிட்டு விழாவில் சிவகார்த்திகேயன் தான் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்களைத் தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு வெளியான அருவி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்பிரபு புருஷோத்தமன் இந்த படத்தை இயக்க உள்ளார் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டே இப்படம் உருவாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒரு பெண்ணின் மன வலிமையையும் இந்த சமுதாயத்தால் அவள் பாதிக்கப்பட்டாள் அதனை எதிர்த்து துணிச்சலாக என்னவெல்லாம் செய்வாள் என்று காட்டி இருந்த படம் தான் அருவி. அந்த படத்திற்கு பிறகு, இயக்குநர் அருண் பிரபு சிவகார்த்திகேயன் தயாரிக்கும் மூன்றாவது படத்தை இயக்கி வந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு 75 நாட்களில் 100க்கும் மேற்பட்ட லொகேஷன்களில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், படத்திற்கான டப்பிங் பணி இன்று அக்டோபர் 10ஆம் முதல் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை 'சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் போட்டு உறுதிபடுத்தியுள்ளது. வெகு விரைவில் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் நடிப்பவர்கள் பற்றி விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. வாழ் படத்திற்கு பிரதீப் விஜய் இசையமைக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஷ்ட். இவர் ஏற்கனவே அருவி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணியை மேற்கொள்வது ரேமண்ட் டெர்ரிக் கிராஸ்டா.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதில் இருள் சூழ்ந்த ஒரு குகைக்குள் உள்ள ஒருவன் மீது, மேலிருந்து விழும் சூரிய வெளிச்சத்தின் வழியே வாழ் என்று படத்தின் தலைப்பு தெரிவது போல் உருவாக்கப்பட்டிருந்தது, அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிறச்செய்தது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது நம்ம வீட்டு பிள்ளை ரிலீஸாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்து இருந்தார். அனைவரும் கண்டு களிக்கும் வகையில், குடும்ப கதையாக உருவாகி இருந்த படம் திரையரங்கில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Sivakarthikeyan's third production, 'Vaazhl', has come to an end and the film's dubbing works began yesterday. Sivakarthikeyan posted this on his Twitter page. He has already produced the films 'Kanaa' and 'Nenjamundu Nermaiyundu Odu Raja'.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more