சிவகார்த்திகேயனின் எஸ்கே 20 ஷுட்டிங் ஆரம்பமாயிடுச்சு...எங்கே தெரியுமா ?
சென்னை : சிவகார்த்திகேயனின் எஸ்கே 20 படத்தின் ஷுட்டிங் இன்று ஸ்பெஷல் பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது. இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சிவகார்த்திகேயன் முதல் முறையாக நடிக்கும் பைலிங்குவல் படத்திற்கு எஸ்கே 20 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜதி ரத்னலு படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு டைரக்டர் அனுதீப் இயக்குகிறார். கலையரசு மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

துவங்கியது எஸ்கே20 ஷுட்டிங்
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தின் ஷுட்டிங் இன்று பூஜையுடன் துவங்கப்பட்டது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். பூஜையை தொடர்ந்து காரைக்குடியில் இந்த படத்தின் ஷுட்டிங்கை துவக்கி உள்ளனர். செம காமெடி, என்டர்டைன்மென்ட் படமாக இந்த படம் உருவாக்கப்பட உள்ளது.

இவங்களும் இருக்காங்களா
எஸ்கே 20 படத்தில் சத்யராஜ் மற்றும் காமெடியன் பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம். முதல் நாள் ஷுட்டிங்கில் சத்யராஜும் கலந்து கொண்டுள்ளார். பிப்ரவரி 13 ம் தேதி முதல் பிரேம்ஜியுடன் ஷுட்டிங்கில் பங்கேற்க உள்ளாராம். ஹீரோவுக்கு இணையான ரோலில் தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டியும் நடிக்கிறாராம்.

ஹீரோயின் யாருன்னு கேட்க கூடாது
ஹீரோயின் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாம். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகப் பெரிய சர்ப்ரைசாக இருக்கும் என கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதால் பான் இந்தியன் நடிகை அல்லது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகை ஒருவர் ஹீரோயினாக அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. ஹீரோயின் யார் என்பதை செம ரகசியமாக வைத்துள்ளார்களாம்.

ஓ...இப்படி ஒன்னு இருக்கா
காரைக்குடியில் இன்று துவங்கிய முதல் கட்ட ஷுட்டிங், தொடர்ந்து ஒரு மாதம் நடைபெற உள்ளதாம். இந்த படத்தில் டூரிஸ்ட் கைடு ரோலில் தான் சிவகார்த்திகேயன் நடிக்க போகிறாராம். அதனால் இரண்டு ஹீரோயின்கள் இந்த படத்தில் நடக்க போவதாகவும் கூறப்படுகிறது. அதில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வருபவராக நடிக்க போகிறாராம். அதனால் வெளிநாட்டு நடிகையே நடிக்க வைக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











