Just In
- 8 min ago
'கே.ஜி.எஃப்' இயக்குனரின் 'சலார்' படத்தில் .. பிரபாஸூக்கு வில்லன் ஆகிறார், நடிகர் விஜய் சேதுபதி?
- 16 min ago
ஹிப்ஹாப் ஆதியின் "அன்பறிவு" படப்பிடிப்பு ஆரம்பம்!
- 30 min ago
பிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
- 47 min ago
யஷ் உட்பட 4 ஹீரோக்கள்.. இந்தியன் 2 -க்குப் பிறகு.. வரலாற்றுப் படத்தை இயக்குகிறாரா ஷங்கர்?
Don't Miss!
- News
எங்க மகளுக்கு சுகபிரசவம் ஆகாது.. சிசேரியன்தான்னு டாக்டர் சொல்லிட்டார்.. அப்புறம் தான்..!
- Finance
சீனா - அமெரிக்கா.. ஜோ பிடன் நிலைப்பாடு இதுதான்.. இந்தியாவிற்கு லாபம்..!
- Sports
அணி என்மேல வச்ச நம்பிக்கைய காப்பாத்த வேண்டியிருந்துச்சு... மனம்திறந்த விஹாரி
- Automobiles
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...
- Lifestyle
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிஜமானது ‘கனா’.. ரீல் சிவகார்த்திக்கேயனாக மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்.. அவரை மாதிரியே அசத்துவாரா?
சென்னை: கனா படத்தில் சிவகார்த்திகேயன் ஏற்றிருந்த கதாபாத்திரம் போலவே தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரர் மார்க் பவுச்சர் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய படம் கனா. இந்த படத்தில் கவுசல்யா முருகேசன் எனும் வலிமையான கதாபாத்திரத்தில் நடித்து, பலரது பாராட்டுகளையும் பெற்றார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

கனா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நெல்சன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதைப்படி, இளம் கிரிக்கெட் வீரரான சிவகார்த்திகேயன், முதல் மேட்சிலேயே நூறு ரன்கள் எடுத்து அசத்துவார்.
ஆனால் விக்கெட் கீப்பிங் செய்யும் போது, அவரது கண்ணில் ஸ்டெம்பு பட்டு காயம் ஏற்பட்டு விடும். இதனால் அவரால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு விடும். அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து, இந்திய கிரிக்கெட் பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார்.
கும்முற டப்புற முதல் வெறித்தனம் வரை.. 2019ல் உங்களை குத்தாட்டம் போட வைத்த டாப் 10 பாடல்கள் இதோ!
இதேபோல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரரான மார்க் பவுச்சர், விக்கெட் கீப்பிங் செய்யும் போது கண்ணில் அடிப்பட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் தற்போது தென்னாப்ரிக்க அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கனா படத்தில் வரும் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் போலவே மார்க் பவுச்சர் வாழ்க்கையிலும் நடந்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இணையம் முழுதும் இப்போது இந்த விசயம் தான் வைரலாகி வருகிறது.