ஜிகர்தண்டாவில் நடிக்க சிவகார்த்திகேயன் போட்ட கண்டிஷன்: கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த நச் பதிலடி!

சென்னை: பீட்சா திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் சுப்புராஜ், அடுத்து ஜிகர்தாண்டா படம் இயக்கினார்.

இந்தப் படத்தில் பாபி சிம்ஹா கேரக்டருக்கு கார்த்திக் சுப்புராஜ் முதலில் தேர்வு செய்திருந்தது விஜய் சேதுபதி தான்.

அதேபோல், சித்தார்த் கேரக்டரில் நடிக்க முதலில் சிவகார்த்திகேயனை தான் கார்த்திக் சுப்புராஜ் அணுகி இருந்தாராம். ஆனால், அது நடக்காமல் போனதற்கான சுவாரஸ்யமான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா

கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா

குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து வந்த கார்த்திக் சுப்புராஜ், 2012ல் பீட்சா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பில் வெளியான பீட்சா, பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ். சித்தார்த், பாபி சிம்ஹா, லக்‌ஷ்மி மேனன் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், இந்தப் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் முதலில் தேர்வு செய்து வைத்திருந்த நடிகர்கள் யாருமே, இதில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்

விஜய் சேதுபதி தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்

பாபி சிம்ஹா நடித்திருந்த அசால்ட் சேது கேரக்டருக்கு முதலில் விஜய் சேதுபதியை தான் கார்த்திக் சுப்புராஜ் டிக் செய்துள்ளார். ஆனால், கால்ஷீட் பிரச்சினை காரணமாக விஜய் சேதுபதியால் நடிக்க முடியாமல் போனதாம். அதற்கு முன்பாகவே அசால்ட் சேது கேரக்டரில் நானே நடிக்கிறேன் என அடம் பிடித்துள்ளார் பாபி சிம்ஹா. ஆனால், அது உனக்கு செட் ஆகாது என கூறியிருந்த கார்த்திக் சுப்புராஜ், பின்னர் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்றதும் பாபி சிம்ஹாவை நடிக்க வைத்துள்ளார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாபி சிம்ஹா, ஜிகர்தண்டா படத்திற்காக தேசிய விருதையும் வென்று அசத்தினார்.

தப்பாக எடை போட்ட சிவகார்த்திகேயன்

தப்பாக எடை போட்ட சிவகார்த்திகேயன்

அதேபோல், சித்தார்த் கேரக்டரில் முதலில் சிவகார்த்திகேயனை தான் நடிக்கை வைக்க இருந்தாராம் கார்த்திக் சுப்புராஜ். கதையை கேட்டர் சிவகார்த்திகேயன், வில்லன் கேரக்டரில் பாபி சிம்ஹா வேண்டாம், அவருக்குப் பதிலாக சத்யராஜ் போன்ற சீனியர் நடிகர்கள் யாராவது நடித்தால், நானும் கண்டிப்பாக நடிக்கிறேன் எனக் கூறினாராம். ஆனால், நான் அந்த ஐடியாவை ஏற்றுக்கொள்ளவில்லை, பாபி சிம்ஹாவே நடிக்கட்டும் என்பதால், சிவகார்த்திகேயனை கமிட் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அப்பவே அப்படியா?

அப்பவே அப்படியா?

சிவகார்த்திகேயன் அப்போது கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து வந்துள்ளார். பெரிய ஒப்பனிங் இல்லாத போதே நடிகரை மாற்ற வேண்டும் என சிவகார்த்திகேயன் கண்டீஷன் போட்டுள்ளது, ரசிகர்களுக்கே ஷாக்கிங்காக அமைந்துள்ளது. இந்நிலையில், ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ள கார்த்திக் சுப்புராஜ், இந்தப் படத்தில் யாரை நடிக்க வைக்க உள்ளார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அதேபோல் ஃபர்ஸ்ட் பார்ட்டில் மிஸ்ஸான சிவகார்த்திகேயனும் விஜய் சேதுபதியும் ஜிகர்தண்டா 2வில் நடித்தால் செம்மையாக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X