கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி.. நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!
சென்னை: தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என மக்களுக்கு புதிய வீடியோ மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
Recommended Video
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சத்தை முன்னதாக சிவகார்த்திகேயன் வழங்கி இருந்தார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் இந்த விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகிறது.

அருண்ராஜா மனைவி மரணம்
கொரோனா இரண்டாம் அலையில் ஏகப்பட்ட மக்கள் தங்கள் நெருங்கிய சொந்தங்களை இழந்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா சமீபத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இறுதிச்சடங்குக்கு சிவகார்த்திகேயன் நேரில் சென்று கலந்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை நெகிழ வைத்தது.

கொரோனா விழிப்புணர்வு
கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஏகப்பட்ட பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டனர். 2020ஐ விட 2021 மிகவும் மோசமான ஆண்டாக மாறி உள்ளது. இந்நிலையில், கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தடுப்பூசி போட்டுக்கோங்க
கொரோனாவில் இருந்து மீள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டும் தான் ஒரே வழி எனக் கூறியுள்ள நடிகர் நானும் கொரோனா முதல் டோஸை செலுத்திக் கொண்டேன் என அறிவித்துள்ளார். மேலும், மக்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

மாஸ்க் போடுங்க
மாஸ்க் போடுங்க, கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவுங்க, வெளியே தேவையில்லாமல் போக வேண்டாம், சமூக இடைவெளியை கடைபிடிங்க, இதெல்லாம் உங்களுக்கே தெரிந்திருக்கும் ஆனால், அதையெல்லாம் முறையாக கடைபிடிக்க வேண்டும் அப்போது தான் இந்த கொரோனா போரில் வெல்ல முடியும் என்று உருக்கமாக பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.

ரூ. 25 லட்சம்
கொரோனா நிவாரண நிதி அளிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வரை நேரில் சந்தித்து ரூ. 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார். தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தற்போது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலும் இறங்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











