»   »  மெரினா புரட்சியாளர்களுக்கு சிவகார்த்திகேயன் மகள் ஆதரவு: வைரலாகும் போட்டோ

மெரினா புரட்சியாளர்களுக்கு சிவகார்த்திகேயன் மகள் ஆதரவு: வைரலாகும் போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ன்னை: ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று எழுதப்பட்ட வாசகம் அடங்கிய பதாகையை வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், இளம்பெண்கள் சென்னை மெரினா கடற்கரையில் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்கள்.

அவர்களோடு சேர்ந்து மெரினா கடற்கரையில் அமர்ந்து போராடி வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். தனது உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாது அவர் போராடி வருகிறார்.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நடிகர் சிவகார்த்திகேயன் 2 நாட்களுக்கு முன்பு மெரினா கடற்கரைக்கு வந்தார். அப்போது அவர் தன்னுடன் மகள் ஆராதனாவையும் அழைத்து வந்திருந்தார்.

ஆராதனா தனது கையில் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று எழுதப்பட்ட வாசகம் அடங்கிய பதாகையை வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

English summary
A picture of actor Sivakarthikeyan's daughter Aaradhana holding a placard in support of Jallikattu protestors in Marina has gone viral.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil