ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயனின் டாக்டர்

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து டாக்டர் படம் அக்டோபர் 9 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருந்தன.

கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே செம ஹிட் ஆன நிலையில், படமும் தற்போது ஹிட் ஆகி உள்ளது.

உறுதியாக இருந்த தயாரிப்பாளர்கள்

உறுதியாக இருந்த தயாரிப்பாளர்கள்

கொரோனா காரணமாக டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. இதனால் டாக்டர் படம் நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூட தகவல் வெளியானது. ஆனால் தியேட்டர்கள் திறக்கும் வரை காத்திருந்து, தியேட்டரில் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர்கள் உறுதியாக இருந்தனர்.

முதல் வாரத்திலேயே 60 கோடி வசூல்

முதல் வாரத்திலேயே 60 கோடி வசூல்

ஆனால் தயாரிப்பாளர்களின் காத்திருப்பு மற்றும் நம்பிக்கை வீண் போகவில்லை. டாக்டர் படம் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் வாரத்திலேயே ரூ.60 கோடிகளை வசூலித்தது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த சினிமா விநியோகஸ்தர்களுக்கு இது மிகப் பெரிய ஆறுதலையும், சந்தோஷத்தையும் கொடுத்தது.

Recommended Video

Doctor Audience Opinion | BMW carல் கெத்தாக வந்து இறங்கிய Sivakarthikeyan
100 கோடி கிளப்பில் இணைந்தது

100 கோடி கிளப்பில் இணைந்தது

டாக்டர் படம் ரிலீஸ் செய்யப்பட்டு நேற்றுடன் 25 நாட்கள் நிறைவடைந்து விட்டது. இந்த 25 நாட்களில் இந்த படம் ரூ.100 கோடியை வசூலித்துள்ளது. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றி வசூல் மட்டுமல்ல, நீண்ட காலத்திற்கு ரசிகர்களை குடும்பத்துடன் தியேட்டருக்கு வரவழைத்ததும் தான். இதனால் தீபாவளிக்கு வசூலாகும் ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கை அனைவரின் மனதிலும் ஏற்பட்டுள்ளது.

சன் டிவி.,யில் ஒளிபரப்பு

சன் டிவி.,யில் ஒளிபரப்பு

டார்க் காமெடி படமான டாக்டர், தீபாவளிக்கு சன் டிவி.,யில் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும், நவம்பர் 5 ம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட பிறகும் தியேட்டரில் இந்த படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் ரூ.100 கோடி வசூலை பெற்றதும், அதிக தொகையை பெற்ற படமும் இது தான்.

வெளிமாநிலங்களிலும் வரவேற்பு

வெளிமாநிலங்களிலும் வரவேற்பு

தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் ஆந்திராவிலும் டாக்டர் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கேரளாவில் அக்டோபர் 27 ம் தேதி தான் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. அதனால் இனி வரும் நாட்களில் தான் மற்ற மாநிலங்களின் வசூல் நிலவரங்கள் வெளியாகும். எப்படி இருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குடும்பம் ,குடும்பமாக தியேட்டர்களுக்கு வந்து ரசிகர்களை படம் பார்க்க வைத்த பெருமை டாக்டர் படத்தையே சேரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு

எதிர்பார்ப்பு அதிகரிப்பு

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் ரூ.100 கோடி பாக்ஸ்ஆபீஸ் கிளப்பில் இணைந்துள்ளதால் அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் மற்றும் டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X