Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எதுல தான்ப்பா ரிலீஸ் பண்ண போறீங்க...குழப்பத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர்
சென்னை : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. இது பிரியங்கா மோனின் முதல் படமும் கூட. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் மற்றும் கேஜொர் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.
'மஞ்சனத்தி புராணம்’ வீடியோ சாங் ரிலீஸ்… ரவுட்டு வண்டுக்கு.. ரவுண்டு வண்டுக்குனு செம ஹிட்!
முதலில் இந்த படம் மார்ச் 26 ம் தேதி தியேட்டரில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டடு. பிறகு தேர்தல் சமயம் என்பதால் படத்தை தற்போது ரிலீஸ் செய்ய வேண்டாம் என படக்குழு முடிவு செய்து ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தது. ரம்ஜானை முன்னிட்டு இந்த படம் வெளியாக உள்ளதாக பிறகு அறிவிக்கப்பட்டது.

குழப்பத்தில் டாக்டர் படக்குழு
ஆனால் அதற்குள் கொரோனா பரவல் அதிகரித்து, தியேட்டர் மூடப்பட்டு விட்டன. இதனால் படத்தை எப்படி ரிலீஸ் செய்வது என தெரியாமல் படக்குழு குழப்பத்தில் உள்ளது. காத்திருந்து தியேட்டரில் ரிலீஸ் செய்யலாமா அல்லது ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யலாம் என ஆலோசித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர்களுக்குள் முரண்பாடு
தற்போது வரை படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முடிவில் தான் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறாராம். ஆனால் கேஜெஆர் ஸ்டூடியோசோ படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யலாம் என நினைக்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் இருவரும் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். ஓடிடி நிறுவனங்களுடன் பேசப்பட்டு வருகிறதாம்

வரவேற்பை பெற்ற ஃபஸ்ட்லுக்
இந்த படத்தில் வினய், யோகிபாபு, இளவரசு, அருண் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஆக்ஷன் கலந்த காமெடி படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபஸ்ட்லுக்கில் பிரம்மாண்ட சேரில் சிவகார்த்திகேயன் அமர்ந்திருப்பது போன்றும், அவரது கையில் ரத்தக்கரையுடன் இருக்கும் கத்தி இருப்பது போன்றும் அமைக்கப்பட்டிருக்கும்.

ஹிட்டான பாடல்கள்
இந்த ஃபோஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. படத்தின் பாடல்களும் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டன. துள்ளல் இசையில் அமைக்கப்பட்ட பாடல்கள் இளைஞர்களின் மனங்களை கவர்வதாக அமைந்துள்ளன.

என்ன செய்ய போகிறார் நெல்சன்
இதற்கிடையில் படத்தின் டைரக்டரான நெல்சன் திலீப்குமார், டாக்டர் படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து இயக்கும் தளபதி 65 படத்தின் வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளார். டாக்டர் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தொடர்ந்து ரிலீஸ் தள்ளி போவது, எந்த நேரமும் லாக்டவுன் மற்றும் படப்பிடிப்பிற்கு தடை வரலாம் என்ற நிலை இருப்பதால் ஏற்கனவே துவங்கிய தளபதி 65 படத்தை எப்படி முடிக்க போகிறோம் என்ற நெருக்கடியில் இருந்து வருகிறார்.