சிவகார்த்திகேயனின் டான் எப்போ ரிலீஸ் தெரியுமா?... வெளியான வேற லெவல் தகவல்

சென்னை : சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஆக்ஷன், காமெடி படம் டான். அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கி வரும் இந்த படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.

பிரியங்கா அருள்மோகன் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படம் சிவாங்கி கிருஷ்ணகுமார், சூரி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, காளி வெங்கட், முனிஸ்காந்த், பாலா சரவணன், ராஜு ஜெயமோகன், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இரண்டாவது முறையாக ஜோடி

இரண்டாவது முறையாக ஜோடி

டாக்டர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் டான். 2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் இந்த படம் ஷுட்டிங் துவங்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகள் கோவையில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் எடுக்கப்பட்டது.

டப்பிங்கும் முடிந்தது

டப்பிங்கும் முடிந்தது

ஆகஸ்ட் மாதத்தில் டான் படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்தது. செப்டம்பர் மாதம் டான் படத்தின் ஷுட்டிங்கை சிவகார்த்திகேயன், சிவாங்கி ஆகியோர் துவங்கினர். அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் எஸ்.ஜே.சூர்யா தனது பங்கு டப்பிங்கை பேசி முடித்தார். சென்னையில் எடுக்கப்பட வேண்டிய ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் உள்ளதாம். ஆனால் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் படப்பிடிப்புக்கள் துவங்க தாமதமாகி வருகிறது.

வரவேற்பை பெற்ற ஃபஸ்ட்லுக்

வரவேற்பை பெற்ற ஃபஸ்ட்லுக்

டான் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக படத்தின் டைட்டிலுடன் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. காலேஜ் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தான் டான் படம் என்பது தெளிவாக தெரிந்தது.

Recommended Video

Doctor - நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து நடிக்கும் முதல் படம் | Archana and Zara | Filmibeat Tamil
எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

இதற்கிடையில் டான் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் துவங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது. டான் படத்தை 2022 ம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். காதலர் தினத்தை முன்னிட்டு, வாரத்தின் இறுதி நாளில் டான் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X