Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சிவகார்த்திகேயனின் டான் பட ரிலீஸ் தேதி மாற்றமா.... அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கும் டான் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பலமுறை தள்ளி வைக்கப்பட்ட டான் ரிலீஸ் தேதி, மீண்டும் மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஆக்ஷன், காமெடி படம் டான். இதனை அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி எழுதி, இயக்கி உள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. பிரியங்கா அருள்மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பூர்வீக
கிராமத்தில்
புதுவீடு
கட்டிய
சிவகார்த்திகேயன்..
வேட்டி
சட்டையில்
மாஸ்
காட்டிய
டான்!

ஆட்டம் போட வைத்த ஜலபுலஜங்
சுமார் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக ஜலபுல ஜங்கு பாடல் கடந்து ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு செம ஹிட்டானது. புரியாத வார்த்தைகளாக இருந்தாலும், அனிருத்தின் இசை, சிவகார்த்திகேயனின் அசத்தல் டான்ஸ் ஆகியன இந்த பாடலை செம ஹிட் ஆக்கியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், ராகேஷ் ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளனர். இதைத் தொடர்ந்து செகண்ட் சிங்கிளாக பே பாடல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.

தள்ளிப் போன ரிலீஸ்
டான் படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஜனவரியில் ஆர்ஆர்ஆர், வலிமை என வரிசையாக பல பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்ததால் டான் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 14 ம் தேதி ரிலீஸ் செய்வதாக முதலில் முடிவு செய்யப்பட்டது.

எத்தனை முறை தள்ளி வைப்பீங்க
பிறகு சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 17 ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்தார்கள். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மார்ச் 25 ம் தேதிக்கு படம் ஒத்திவைக்கப்பட்டது. அதே நாளில் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டதால், டான் படத்தின் ரிலீஸ் தேதியை மே 13 ம் தேதிக்கு மாற்றினார்கள்.

வெளியிட போறது இவங்க தானா
இதனால் ரிலீசிற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றிருந்தது. சேட்டிலைட் உரிமத்தை முதலில் ஜீ தமிழ் வாங்கியதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது கலைஞர் டிவி வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் வாங்கி உள்ளது.

என்னது மறுபடியும் தேதி மாற்றமா
லேட்டஸ்ட் தகவலாக டான் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை தள்ளி போகவில்லையாம். அதற்கு பதில் அறிவித்த தேதிக்கு முன்பாகவே படத்தை ரிலீஸ் செய்ய போகிறார்களாம். மே 13 ம் தேதிக்கு பதிலாக மே 5 ம் தேதி டான் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. என்ன காரணம் என்று சொல்லாமல், மீண்டும் டான் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.