»   »  கல்குவாரியில் சடலமாக கிடந்த சிவகார்த்திகேயன் வீட்டு தோட்டக்காரர்

கல்குவாரியில் சடலமாக கிடந்த சிவகார்த்திகேயன் வீட்டு தோட்டக்காரர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் நடிகர் சிவகார்த்திகேயனின் வீட்டில் தோட்டக்காரராக வேலை பார்த்த ஆறுமுகம் கல்குவாரியில் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் வீடு திருச்சி காஜாமலை பகுதியில் உள்ளது. சாத்தனூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அந்த வீட்டில் தோட்ட வேலை செய்து வந்துள்ளார்.

Sivakarthikeyan's gardener found dead

ஆறுமுகம் கடந்த 3 நாட்களாக வேலைக்கு வரவில்லை. காரணம் என்னவென்று தெரியாமல் இருந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் மிதப்பதை மக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் சிவகார்த்திகேயன் வீட்டு தோட்டக்காரர் ஆறுமுகம் என்பது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Actor Sivakarthikeyan's gardener Arumugam was found dead in Trichy. Police have registered a case and are investigating.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil