twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி சாரைப் பிடிக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளில் நானும் ஒருத்தன்! - சிவகார்த்திகேயன்

    By Shankar
    |

    ரஜினி சாருக்கு பிடிக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளில் நானும் ஒருத்தன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

    ரஜினியின் அனுமதியுடன் அவர் பெயரை தலைப்பில் பயன்படுத்தி வெளியாகும் படம் ரஜினி முருகன்.

    சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி நடித்துள்ள இந்தப் படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். தடைகள் பல கடந்து வரும் டிசம்பர் 4-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

    சிவகார்த்திகேயன் பேட்டி

    Sivakarthikeyan's interview

    இதுகுறித்து சிவகார்த்திகேயன் அளித்துள்ள ஸ்பெஷல் பேட்டி:

    நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் பாடல்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் 'ரஜினி முருகன்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'என்னம்மா இப்படி பண்றீங்களே மா' பாடல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. இந்த பாடல்கள் திரைப்படத்திற்கு கூடுதல் பலமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வருவதற்க்கு ஒரு தூண்டு கோலாகவும் அமைந்துள்ளது.

    இமானுக்கு நன்றி

    நான் ஒரு கானொளியில் கண்டேன் ஒரு 'சேக்' அவரது பாணியில் இந்த பாடலை பாடி ரசித்துக் கொண்டு இருந்தார் அதைப்பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த பாடல் படத்திற்க்கு அடையாளமாகவும் மாறியுள்ளது அதற்காக இசையமைப்பாளர் டி.இமானுக்கு என் நன்றிகளை இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

    என் கேரக்டர்

    இந்த திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் எந்த வேலையாக இருந்தாலும் சரி அதை செய்து முடித்து பெரியாளாக வேண்டும் என்பதை குறிக்கோளாக எடுத்து கிராமத்தில் வாழும் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்வியலை சுவாரசியமாகவும் நகைச்சுவை உணர்வுகளுடன் காட்சியமைத்து இருக்கிறோம். என்னுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் மற்றும் இயக்குநர் சமுத்திரகனி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    ரஜினி அனுமதியுடன்...

    இந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவரும் என்பதில் எந்த விதமாக சந்தேகமும் இல்லை. "ரஜினி முருகன்" திரைப்படத்தின் பெயர், அனைத்து தரப்பு மக்களை சென்றடைவதற்குகான முக்கியமான காரணமாகும்.

    அச்சம்

    இந்த பெயரை வைக்க வேண்டும் என்று சொல்லும் போது மனதில் சிறிய அச்சம் ஏற்ப்பட்டது. ஏன்னென்றால் சிறு வயதில் இருந்தே ரஜினி சாரின் வெறித்தனமான ரசிகன். அதே நேரத்தில் அவருடைய பெயரை அவரது அனுமதியுடன் எனது படத்திற்க்கு வைப்பது என்பது பெருமைக்குரியது. நான் பல சுவரொட்டிகளில் பார்த்திருக்கிறேன் ரஜினி சார் ரசிகர்கள் அவர்களது பெயருக்கு முன்னால் ரஜினி சார் பெயரை சேர்ப்பது வழக்கம். அதனால் எதுவும் பிரச்சனை வருமோ என்ற அச்சம் இருந்தது.

    ரஜினி ரசிகன்

    ஆனால் தற்போது அவர்களின் பெரும் அதரவுடம் படம் வெளிவரப்போகிறது என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன் ரஜினி சாரைப் பிடிக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளில் நானும் ஒருத்தன் என்பதால்தான் எனக்கு குழந்தை ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இந்த திரைப்படம் எல்லா தரப்பு மக்களையும் கவரும் விதமாக இருக்கும்.

    கதம்பம்

    எடுத்துக்காட்டாக வயதானவர்கள் விரும்பும் விதமாக குடும்பத்தின் வாழ்வியலை நகைச்சுவையுடனும், இளைஞர்களும் ரசிக்கும் விதமாக காதல் காட்சிகளும், குழந்தைகள் விரும்பும் விதமாக பாடல்கள் மற்றும் நகைச்சுவைகளை சேர்த்து ஒரு கதம்பமாக கொடுத்துள்ளோம்.

    ராஜ்கிரண்

    படத்தின் சிறப்பு தாத்தா கதாபாத்திரத்தில் வரும் ராஜ்கிரண் அவரை சுற்றி நடக்கும் குடும்ப அழகியலை நகைச்சுவை உணர்வுடன் பதிவு செய்துள்ளோம். இந்த திரைப்படத்தில் புகைபிடிப்பது போன்ற எந்த காட்சிகளும், இடம் பெறவில்லை. இயக்குநர் பொன்ராம் கதையை விவரிக்கும் தருணத்தில் என்னிடம் கூறியது இந்த திரைப்படம் குடும்பத்துடன் வந்து பார்த்து ரசிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்றார்.

    புகைக்கும் காட்சிகள் இல்லை

    குழந்தைகள் ரசிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திரைப்படத்தில் நான் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கவில்லை. அதுமட்டுமின்றி இதற்கு முன் நான் நடித்த எந்த திரைப்படத்திலும் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் தேவைப்படவில்லை. அதனால் தவிர்த்திருக்கிறேன். அத்துடன் அதுபோன்ற எண்ணமும் எனக்கு கிடையாது.

    ரசிகர்களை மதித்து...

    இதைத்தாண்டி மக்களின் நிலைப்பாடும் தற்போது தெளிவாக உள்ளது. மக்கள் திரைப்படத்தை பார்த்து ரசித்து விட்டு பின்னர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விடுகின்றனர். நகைச்சுவை கலந்து ஒரு திரைப்படம் கொடுக்க நினைக்கும் போது நாம் இது போன்ற கருத்துகளை ஆராயமுடியாது. என்னை ரசிப்பவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களாக இருப்பதால் அவர்களை மதித்து அவர்கள் ரசிக்கும் விதமாக தான் காட்சியமைத்து இருக்கிறோம்.

    மதுரை மண்வாசனை

    இந்த திரைப்படம் மதுரையின் மண் வாசனை மாறாமலும் அதே நேரத்தில் மதுரையை சுற்றியுள்ள கிராமத்தின் கொண்டாட்டமான தருணத்தை நகைச்சுவையாக தந்துள்ளோம். படத்தை பார்த்து மக்கள் தான் எப்படி இருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும். ஆனால் நாங்கள் நினைத்ததை சிறப்பாக கொடுப்பதற்கு ஏற்ப என்னுடன் சூரி, ராஜ்கிரண், இயக்குநர் சமுத்திரகனி, ஒளிப்பதிவாளர் பாலசுப்புரமணியம் மற்றும் படக்குழுவினர் சிறப்பாக அமைந்தனர். அதனால் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்த்து ரசிப்பார்கள் என்பதில் எனக்கு எந்த வித மாற்று கருத்தும் இல்லை.

    என் குழந்தை...

    என் குழந்தைக்கு ரஜினி , விஜய், அஜித் இவர்களை பார்த்தால் பெயர் சொல்லும் அளவிற்கு தெரியும். தொலைக்காட்சிகளில் பார்த்தால் அவர்களது பெயர் சொல்லி மாமா என்று கூப்பிடுவாள்.

    டிவி பார்க்க நேரமில்லை

    அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதற்க்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் மா கா பா ஆனந்த நண்பர் என்பதால் தொடர்ந்து அலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவோம். புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்கள் கிடையாது. அலைபேசியில் வாட்ஸ் ஆப், பேஸ்புக் மற்றும் டுவிட்டரை கவனிக்கவே நேரம் போதுமானதாக உள்ளது. என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் தான் இப்போது வரைக்கு என் நெருங்கிய நண்பர்கள் அவர்களுடன்தான் நான் இருக்கிறேன்.

    நன்றி

    அவர்களில் ஒரு நண்பர் அருண்ராஜா பாடலாசிரியாரகவும் மற்றும் சிலபடங்களில் நடித்தும் இருக்கிறார். இன்னும் இரண்டு நண்பர்கள் தயாரிப்பு துறையில் வேலை செய்கின்றனர். எனக்கு வாய்ப்பளித்த அனைவரையும் நான் நன்றியுடன் நினைக்கிறேன். என்னை ஒரு கதாநாயகனாக வைத்து இயக்கிய இயக்குனர்களுக்கு தான் நான் பெரிய நன்றி தெரிவிக்க வேண்டும்.

    நினைச்சே பார்க்கல

    நான் நினைத்துக் கூடப் பார்த்தது கிடையாது கதாநாயகனாக திரையில் வருவேன் என்று. இயக்குநர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை தான் அதற்கு காரணம். இயக்குநர் பாண்டிராஜ் தொலைக்காட்சியில் இருந்து நேரடியாக என்னை கதாநாயகனாக நடிக்க வைத்தார். இயக்குநர் துரை செந்தில்குமார் "எதிர் நீச்சல்" படத்தில் கடைசி இருவது நிமிடம் என்னை வசனம் பேசாமலே நடிக்க வைத்தார். இயக்குநர் எழில் என்னை வைத்து முழுநீள நகைச்சுவை படத்தை எடுத்தார். இயக்குநர் பொன்ராம் சத்யராஜ் போன்ற பெரிய நடிகருக்கு இணையாக நடிக்க வைத்திருந்தார். இவை அனைத்தும் அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை மட்டும் தான். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை பதிவு செய்து கொள்கிறேன் இவர்கள்தான் என் குரு.

    நடனம்

    நான் முதலில் நடனம் தொலைக்காட்சிகலில் கற்றுக் கொண்டது தான் பிறகு பல முயற்சிகளுக்கு பின் தற்போது முன்பை விட நன்றாக ஆடுகிறேன் என்கின்றனர் அதனால் சிறிய நம்பிக்கை வந்துள்ளது. இதே போல் கடினமாக உழைத்தால் பிற்காலத்தில் ஒரு நல்ல நடனமாடும் நாயகனாக வருவேன் என்று நினைக்கிறேன்.

    மனைவி

    என்னுடைய காதலி மற்றும் தோழி அனைவருமே என மனைவி மட்டும் தான்.

    இளமை நாட்கள்

    காரைக்குடியில் பிரியா மெஸ் கடையில் சாப்பிட்டதில் இருந்து டையட் என்பதை மறந்துவிட்டேன் அந்த அளவுக்கு நன்றாக உணவு இருந்தது. பள்ளியில் ஒரே ஒரு முறை மேடை ஏறி பேச்சுப் போட்டியில் கலந்து இருக்கிறேன் அதற்கு பிறகு கல்லூரி காலங்களில் மட்டும் தான் மேடை ஏறியுள்ளேன்.

    விக்ரம்

    நான் பேட்டி எடுத்த நடிகர்களில் எனக்கு பிடித்தவர் விக்ரம். அவர்ளுடன் ஒருமுறை பேட்டி எடுக்கும் போது அவர் கூறினார் ஒருனாள் நீ கதாநாயகனாக வருவாய் அப்படி நடிக்கும் போது நான் அதில் வில்லனாக நடிப்பேன் என்றார். அப்படி ஒரு கதை கிடைத்தால் கண்டிப்பாக விகரம் சாரைப் பார்த்து வில்லனாக நடிக்க கேட்பேன். ரஜினி முருகன் திரைப்படத்தை குடும்பத்துடன் வந்து திரையரங்கில் பார்த்து ரசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    English summary
    Actor Sivakarthikeyen's interview on the release of Rajinimurugan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X