twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சீனாவில் கனா படம் ராக்கிங்... தொடர்ந்து 1000 திரையரங்குகளில் ஓடி சாதனை

    |

    சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜின் முதல் இயக்கமாக வெளியான படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டவர்களின் சிறப்பான நடிப்பும் படத்திற்கு மெருகூட்டியது. தற்போது இந்தப் படம் சீனாவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.

    டீசரா? டிரைலரா? 3வது சிங்கிளா?...பீஸ்ட் அடுத்த அப்டேட் இன்று வருதா?...காத்திருக்கும் ரசிகர்கள் டீசரா? டிரைலரா? 3வது சிங்கிளா?...பீஸ்ட் அடுத்த அப்டேட் இன்று வருதா?...காத்திருக்கும் ரசிகர்கள்

    நடிகர் சிவகார்த்திகேயன்

    நடிகர் சிவகார்த்திகேயன்

    நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சிறப்பான படங்களை ரசிகர்களுக்காக தந்து வருகிறார். அவரது டாக்டர் படத்தின் வெற்றியை அடுத்து தற்போது டான் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் அயலான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்தடுத்த படங்களின் சூட்டிங் என அவர் பிசியாக காணப்படுகிறார்.

    தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்

    தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்

    தொடர்ந்து சிறப்பான படங்களை தன்னுடைய எஸ்கே புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்தும் வருகிறார். இவரது தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான முதல் படம் கனா. கிராமத்தில் இருந்துக் கொண்டு தன்னுடைய கனவை துரத்தும் இளம்பெண்ணின் கனவு நனவாகும் கதைக்களத்தை கொண்டு இந்தப் படம் வெளியானது.

    சிறப்பான கனா படம்

    சிறப்பான கனா படம்

    ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் சிவகார்த்திகேயனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதேபோல படத்தில் நடித்திருந்த சத்யராஜ் உள்ளிட்டவர்களும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்த நிலையில், படம் சிறப்பான வெற்றியை கொடுத்தது.

    சீனாவில் வெளியான கனா

    சீனாவில் வெளியான கனா

    இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து சமீபத்தில் படத்தை சீனாவில் திரையிடும் முயற்சியை படக்குழு மேற்கொண்டிருந்தது. அதையொட்டி சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் படம் தற்போது 11 நாட்களை தாண்டி சீனாவில் தொடர்ந்து 1000 திரையரங்குகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடி வருகிறது.

    ரூ.2 கோடிக்கும் மேல் வசூல்

    ரூ.2 கோடிக்கும் மேல் வசூல்

    11 நாட்களில் 2 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் இருந்து நிலானி என்பவர் ஒருநாள் தான் தமிழ் பெண்ணாக இருந்து படத்தை பார்க்கவுள்ளதாக தெரிவித்து யூடியூப் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவர் பேசும் தமிழ் அவ்வளவு இனிமையாக உள்ளது.

    சீனாவிலிருந்து வீடியோ வெளியீடு

    சீனாவிலிருந்து வீடியோ வெளியீடு

    படம் மிகவும் சிறப்பாக உள்ளதாக அவருடன் மற்றவர்களும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர். பாரம்பரியமாக சேலை கட்டி, தோசை சாப்பிட்டு அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அவரின் இந்தப் பதிவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

    சிவகார்த்திகேயன் நன்றி

    சிவகார்த்திகேயன் நன்றி

    சீன மக்களையும் இந்தப் படம் கவர்ந்துள்ளது இந்தப் படத்தின் மற்றொரு மைல்கல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தை பார்த்த சீன மக்கள் எமோஷனலாக கண்கலங்கும் காட்சிகளையும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. மொத்தத்தில் தமிழ் மக்களை மட்டுமின்றி சீன மக்களையும் இந்தப் படம் கவர்ந்துள்ளது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

    English summary
    Actor Sivakarthikeyan thanks fans of China for Kanaa movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X