Don't Miss!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- News
ஒரு வேளைக்கு ரூ 3 லட்சத்தில் டீ குடிக்கும் நீடா அம்பானி.. மகன் நிச்சயத்தில் செய்த காரியம் தெரியுமா?
- Technology
அவசரப்பட்டு.. ரூ.9999 கொடுத்து.. Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
கழுத்தை நெறிக்கும் கடன்... மாவீரன் படத்துக்கு வந்த சிக்கல்...?: அப்செட்டான சிவகார்த்திகேயன்!
சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது 'மாவீரன்' படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
மடோன் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தற்போது மாவீரன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநரை தட்டித் தூக்கிய சிவகார்த்திகேயன்.. மாவீரன் படத்தில் சம்பவம் இருக்கு!

எதிர்பார்ப்பில் மாவீரன்
சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது. மண்டேலா படத்தைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கி வரும் மாவீரன், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லனாக மிஷ்கினும் நடித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனின் புதிய லுக், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸாவதில் புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாம்

கடன் பிரச்சினையில் எஸ்கே
சிவகார்த்திகேயன் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ஆரம்பத்தில், அவருக்கு சில படங்கள் வெற்றிப் பெற்றன. ஆனால், அதன் பின்னர் வெளியான படங்களில் நஷ்டம் அடைந்தார் சிவகார்த்திகேயன். அதுமட்டும் இல்லாமல் சீமராஜா, வேலைக்காரன் திரைப்படங்களும் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்கவில்லை. அதேபோல் அயலான் திரைப்படமும் சுமார் 4 ஆண்டுகளாக முடங்கி விட்டது. இதனால் அவர் அதிக கடன் பிரச்சினையில் சிக்கியதாக சொல்லப்பட்டது.

சிக்கலில் மாவீரன்
கடன் தொல்லையில் சிக்கித் திணறிய சிவகார்த்திகேயன், ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் குறிப்பிட்ட ஒரு தொகையை பைனான்சியர்களுக்கு திருப்பி கொடுத்து வந்தாராம். கடந்தாண்டு வெளியான 'டாக்டர்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால் நிம்மதி பெருமூச்சுவிட்ட சிவகார்த்திகேயன், ஓரளவு கடனில் இருந்து மீளத் தொடங்கினார். ஆனால், இந்தாண்டு ரிலீஸான டான், பிரின்ஸ் இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதேநேரம் இந்தப் படங்கள் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பும் இல்லை என்பதால், நிலைமை இன்னும் மோசமாகியுள்ளதாம்.

முடிவுக்கு வருமா பஞ்சாயத்து?
அதிகமான கடன் பிரச்சினையால் தான் சன் பிக்சர்ஸ் பேனரில் தொடர்ந்து 4 படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், அதன் பின்னர் அதுகுறித்து அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே அயலான் படத்தை விரைவில் வெளியிடும் முடிவில் இருக்கிறார். இதனால் மாவீரன் படம் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சீக்கிரம் திருப்பி தர வேண்டும் என, சிவகார்த்திகேயனுக்கு பைனான்சியர்கள் அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மாவீரன் திரைப்படம் சொன்னபடி வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.