Don't Miss!
- News
ஸ்டாலின் தேசியத் தலைவர் ஆகிவிட்டார்! டெல்லிக்கு போனதே 2 முறை தான்! துரைமுருகன் 'பளிச்'!
- Sports
அடிதூள்.. ஐபிஎல் 2023 தேதிகள் இதுதான்.. ரசிகர்கள் எதிர்பார்க்காத மெகா மாற்றமும் உண்டு.. முழு விவரம்
- Finance
IBM அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. 3900 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன தெரியுமா..?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Lifestyle
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மீண்டும் பஞ்சாயத்துக்கு வரும் மாவீரன்... ரீ-ஷூட்டுக்கு ரெடியான சிவகார்த்திகேயன்..?
சென்னை: சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து மாவீரனில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
மண்டேலா திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த மடோன் அஸ்வின், மாவீரன் படத்தை இயக்கி வருகிறார்.
சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கும் மாவீரன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது.
இந்நிலையில், மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸில் சில சிக்கல்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாவீரன்
படக்குழுவின்
பொங்கல்
கொண்டாட்டம்...
ஜோடியாக
வந்த
சிவகார்த்திகேயன்,
அதிதி

மாவீரனாகும் சிவகார்த்திகேயன்
டாக்டர், டான் என ஹிட் கொடுத்து வந்த சிவகார்த்திகேயன், பிரின்ஸ் படத்தின் தோல்வியால் கொஞ்சம் துவண்டு காணப்படுகிறார். இதனால் தற்போது நடித்து வரும் மாவீரன் படத்தை அதிகம் நம்பியுள்ளார். மண்டேலா படத்தைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கி வரும் மாவீரன், தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லனாக மிஷ்கினும் நடித்து வருகின்றனர். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

படப்பிடிப்பில் மோதலா?
ஏற்கனவே சிவகார்த்திகேயன் கடன் பிரச்சினையில் சிக்கி தவிப்பதால், பைனான்சியர்கள் நெருக்கடி கொடுப்பதாக செய்திகள் வெளியாகின. சொந்த பட தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்ததே கடன் பிரச்சினைக்கு காரணம் என சொல்லப்பட்டது. ஆனால், கடன் பிரச்சினைக்கும் மாவீரன் ரிலீஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தகவல்கள் வெளியாகின. இதனிடையே ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதாகவும், அதனால் ஷூட்டிங் கேன்சல் ஆனதாகவும் சொல்லப்பட்டது.

மாவீரன் ரீ-ஷூட்டிங்
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பொங்கல் தினத்தில் மாவீரன் படக்குழுவினர் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா உள்ளிட்ட மாவீரன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஏற்கனவே ஷூட் செய்யப்பட்டதில் சில காட்சிகள் சிவகார்த்திகேயனுக்கு பிடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் அவருக்கும் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகின.

ரிலீஸ் தேதிக்கு வெயிட்டிங்
தொடர்ந்து சிவகார்த்திகேயன், மடோன் அஸ்வின் இடையே மோதல் ஏற்பட்டுவருவதால், மீண்டும் சில காட்சிகளை மட்டும் ரீ-ஷூட் செய்யவுள்ளார்களாம். சிவகார்த்திகேயன் கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஒவ்வொரு காட்சியையும் திருப்தி இருந்தால் மட்டுமே ஓக்கே சொல்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தற்போது மாவீரன் படத்தின் சில காட்சிகள் ரீ-ஷூட் செய்யப்பட உள்ளதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.