சிவகார்த்திகேயன் பட டைட்டிலாகும் ரஜினி டயலாக்... அப்படி என்ன டைட்டில்
சென்னை : இளைஞர்கள் பலரை கவர்ந்த கலகலப்பான நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். சமீபத்தில் தனக்கு மகன் பிறந்ததையும், அவருக்கு அழகான தமிழ் பெயர் வைத்ததையும் மிக அழகாக, அனைவரும் ரசிக்கும்படி, நெகிழ்ச்சி பதிவாக சிவகார்த்திகேயன் வெளியிட்டதும் பலரை கவர்ந்து விட்டது.
Recommended Video
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. பிரியங்கா அருள் மோகனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த படம் டார்க், ரொமான்டிக் காமெடி படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் தான் இந்த படத்தை ரிலீஸ் செய்வது என படக்குழு உறுதியாக இருப்பதால் தியேட்டர்கள் திறப்பிற்காக காத்திருக்கின்றனர்.

அயலானும் ரிலீசுக்கு ரெடி
இதைத் தொடர்ந்து டைரக்டர் ரவிக்குமார் இயக்கும் சையின்ஸ் ஃபிக்சிங் என்டர்டைனர் படமான அயலான் படத்தில் ரகுல் ப்ரீத் சிங்குடன் இணைந்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் வேலைகளும் கிட்டதட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

காலேஜ் ஸ்டூடன்டாக சிவகார்த்திகேயன்
தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் காலேஜ் ஸ்டூடன்டாக நடிக்கிறாராம். இதில் பிரியங்கா அருள் மோகன், சூரி, முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலா சரவணன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதுலையும் பிஸி தான்
அடுத்தடுத்த படங்களின் ஷுட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் இதற்கிடையில் தயாரிப்பு, படங்களுக்கு பாட்டெழுதுவது, பின்னணி பாடுவது போன்ற வேலைகளையும் கவனித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது தான் பிக்பாஸ் கவின் நடித்துள்ள லிஃப்ட் படத்தில் பின்னணி பாடி முடித்துள்ளார். அடுத்ததாக விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் ஒரு பாடலை இவர் தான் எழுத உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுமுக இயக்குனருடன் கூட்டணி
இதற்கிடையில் மற்றொரு புதிய படத்தில் நடிக்கவும் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி உள்ளார். அறிமுக இயக்குனரான அசோக் இந்த படத்தை இயக்குகிறார். இவர் டைரக்டர் அட்லீயிடம் உதவியாளராக பணியாற்றியவராம். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

ரஜினி டயலாக் தான் டைட்டில்
இந்த படத்திற்கு ரஜினி, சிவாஜி படத்தில் பேசும் பஞ்ச் டயலாக்கான சிங்க பாதை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிங்க பாதை படத்தின் ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளதாம். மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











