»   »  சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் சிவகார்த்திகேயன்... இயக்குநர் இவர்தான்!

சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் சிவகார்த்திகேயன்... இயக்குநர் இவர்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிவகார்த்திகேயனின் அடுத்த படம்- வீடியோ

சென்னை : 'வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து தற்போது பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய 75 சதவிகிதம் முடிந்து விட்ட நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

பொன்ராம் படம்

பொன்ராம் படம்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா ஆகியோர் நடித்து வரும் படத்திற்கு 'சீமராசா' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் இதுவரை டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்தப் படம் ஏப்ரலில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. பொன்ராம் இயக்கி வரும் படத்தின் வேலைகளை முடித்ததும் 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சயின்ஸ் ஃபிக்‌ஷன்

சயின்ஸ் ஃபிக்‌ஷன்

'இன்று நேற்று நாளை' படத்தை டைம் டிராவல் கதையாக சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் இயக்கிய ரவிகுமார், தனது அடுத்த படத்தையும் அதே ஜானரிலேயே இயக்க உள்ளார். கடந்த ஒரு வருடமாக இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான்

இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தப் படத்தின் பட்ஜெட்டில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செலவுக்கு மட்டும் 25% திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்தப் படத்திற்கு இசையமைக்க, ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். 'ரெமோ, 'வேலைக்காரன்' 'SK12' படங்களை2த் தொடர்ந்து இந்தப் படத்தையும் தனது நண்பர் பெயரில் சிவகார்த்திகேயனே தயாரிக்க இருக்கிறார்.

English summary
Sivakarthikeyan is acting in the film directed by Ponram. Sivakarthikeyan is going to act in the Science Fiction film will be directed by Ravikumar Rajendran, who is the director of 'Indru netru naalai'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X