SK - தமன் ராக்கிங் காம்போ… கலர்ஃபுல் மேக்கிங்… அமர்க்களமாக வெளியானது பிரின்ஸ் செகண்ட் சிங்கிள்
சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரின்ஸ் படத்தில் இருந்து செகண்ட் சிங்கிள் டிராக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டோலிவுட்டில் களமிறங்கும் SK
டாக்டர், டான் என அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது. பிரின்ஸ் திரைப்படம் மூலம் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தெலுங்கிலும் அறிமுகமாகிறார். சிவகார்த்திகேயனின் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருப்பதால், நேரடியாகவே இப்போது களமிறங்குகிறார். இந்தப் படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SK உடன் ஜோடி சேர்ந்த உக்ரைன் நடிகை
பிரின்ஸ் படத்தின் கதைக்களம் பாண்டிச்சேரியில் தொடங்கி லண்டன், ஃபிரான்ஸ் என பயணிக்கும் என சொல்லப்படுகிறது. காதல், ரொமான்ஸ் என கமர்சியலாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். உள்ளூர் நடிகைகளுடன் ஆட்டம் போட்டு வந்த சிவா, முதன்முறையாக ஹாலிவுட் நடிகையுடன் ரொமான்ஸ் செய்யவுள்ளதைப் பார்க்க ரசிகர்களும் வெயிட்டிங்கில் உள்ளனர். இந்தப் படத்தில் சத்யராஜும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளியானது ஜெசிக்கா லிரிக்கல் வீடியோ
சிவகார்த்தியேன் படங்களுக்கு தொடர்ச்சியாக அனிருத் இசையமைத்து வந்த நிலையில், பிரின்ஸ் படத்திற்கு தமன் மியூசிக் கம்போஸ் செய்துள்ளார். முதன்முறையாக இணைந்துள்ள சிவகார்த்திகேயன், தமன் காம்போ, ஃபர்ஸ்ட் சிங்கிளான 'பிம்பிளிக்கி பிலாப்பி' பாடலில் பட்டையைக் கிளப்பினர். இப்போது 'ஜெசிக்கா' என்ற இரண்டாவது பாடலையும் ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு வெரைட்டி காட்டியுள்ளனர். தெருக்குரல் அறிவு எழுதியுள்ள ஜெசிக்கா பாடலை, இசையமைப்பாளர் தமனே பாடி அசத்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன் க்யூட் பெர்ஃபாமன்ஸ்
"ஹம்ப்டி டம்ப்டி ஃப்ரம் தி சைல்ட் மை ஹார்ட்" எனத் தொடங்கும் ஜெசிக்கா பாடல் முழுவதும் ரகளையான வரிகளால் புகுந்து விளையாடியுள்ளார் தெருக்குரல் அறிவு. அதேபோல், சதீஷின் கோரியோகிராபில் சிவகார்த்திகேயன் செம்ம க்யூட்டான டான்ஸ் ஸ்டெப்ஸ் போட்டு அமர்க்களம் செய்துள்ளார். தமனின் ராக்கிங் இசையில் அவரே பாடியுள்ள ஜெசிக்கா பாடல், கலர்ஃபுல்லாக உருவாகியுள்ளது. வெளியானது முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் ஜெசிக்கா லிரிக்கல் வீடியோ, தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.


Click it and Unblock the Notifications











