»   »  விநாயகர் சதுர்த்தி ரேஸிலிருந்து.... மீண்டும் விலகியது "ரஜினிமுருகன்"

விநாயகர் சதுர்த்தி ரேஸிலிருந்து.... மீண்டும் விலகியது "ரஜினிமுருகன்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் திரைப்படம் மீண்டும் தள்ளிப் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செப்டம்பர் 17 ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக தினசரிகள் மற்றும் ஊடகங்களில் படத்தை விளம்பரப்படுத்தி வந்தனர், இந்நிலையில் பொருளாதார சிக்கல்கள் காரணமாக படம் மீண்டும் தள்ளிப் போயிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.


மாப்ள சிங்கம், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா மற்றும் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற திரைப்படங்கள் கடைசி நேரத்தில் விநாயகர் சதுர்த்தி ரேஸில் இணைந்திருக்கின்றன.


விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக இருந்த ரஜினிமுருகன் திரைப்படம் மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தினசரிகளில் அப்படத்தின் விளம்பரங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளனர்.


நயன்தாராவின் மாயா

நயன்தாராவின் மாயா

நயன்தாராவின் மாயா மற்றும் கவுண்டமணியின் 49 ஓ போன்ற திரைப்படங்களுடன், சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் திரைப்படம் வெளியாகவிருந்தது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி ரேஸில் இருந்து திடீரென்று விலகியுள்ளது ரஜினிமுருகன் திரைப்படம்.
கடைசி நேரத்தில்

கடைசி நேரத்தில்

விமலின் நடிப்பில் உருவான மாப்ள சிங்கம், ஜெய் நடிப்பில் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமாரின் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா போன்ற திரைப்படங்கள் விநாயகர் சதுர்த்தி ரேஸில் கலந்து கொள்கின்றன.
மீண்டும் எப்போது

மீண்டும் எப்போது

ரஜினிமுருகன் படத்தின் வெளியீட்டுத் தேதியை தள்ளிவைத்திருக்கும் படக்குழுவினர், மீண்டும் படத்தை எந்தத் தேதியில் வெளியிடப் போகின்றனர் என்பதை குறிப்பிடவில்லை.


3 மாதங்களுக்கும் அதிகமாகவே ரஜினிமுருகன் படத்தின் வெளியீடு தள்ளிப் போவது குறிப்பிடத்தக்கது.
English summary
Sivakarthikeyan's Commercial Entertainer Rajini Murugan, has Been Postponed due to Financial Reasons.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil