»   »  ரெமோ படத்திற்கு வரிவிலக்கு: தமிழக அரசு ஆணை #Remo

ரெமோ படத்திற்கு வரிவிலக்கு: தமிழக அரசு ஆணை #Remo

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ரெமோ. படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படம் நாளை ரீலிஸாகிறது. இந்த நிலையில், ரெமோ படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளித்து தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்துள்ளது.

ரெமோ படம் வெளியாகும் நாள்முதல் கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர், ரெமோ படத்தை பார்வையிட்டு வரிவிலக்கு அளிக்க பரிந்துரைத்தார்.


ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி, மேக்கப் கலைஞர் சீன் பூட், இசையமைப்பாளர் அனிருத் என பிரம்மாண்ட தொழில்நுட்ப கலைஞர்களும் இதில் பணியாற்றியுள்ளனர். 24AM ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.


திரையுலகில் சலசலப்பு

திரையுலகில் சலசலப்பு

ரெமோ படத்திற்கு, தமிழக அரசு வரி விலக்கு அளித்துள்ளது, திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் பெயர் வைப்பது உட்பட, பல நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தமிழ் படங்களுக்கு, தமிழக அரசு வரி விலக்கு அளித்து வருகிறது. இதற்காக, படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


பெயர் மாறிய படங்கள்

பெயர் மாறிய படங்கள்

ஜீவா நடித்த, எஸ்.எம்.எஸ்., படம், சிவா மனசுல சக்தியாக மாறியது. மாஸ் படம் மாசு என்ற மாசிலாமணியாக மாறியது. ஆல் இன் ஆல் அழகுராஜா வெறும் அழகுராஜாவாக தமிழில் பெயர் மாற்றப்பட்டன.


வரிவிலக்கு சரியா?

வரிவிலக்கு சரியா?

சமீபத்தில், உதயநிதி நடித்த, கெத்து, மனிதன் படங்களுக்கு, வரி விலக்கு மறுக்கப்பட்டது. இரண்டு பெயர்களும், தமிழ் வார்த்தை இல்லை என, கூறப்பட்டது. ஆனால், சிவகார்த்திகேயன் நடித்த, ரெமோ படத்திற்கு, தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. 'ரெமோ தமிழ் வார்த்தை இல்லை; இதற்கு எப்படி வரி விலக்கு அளிக்கப்பட்டது' என, பட உலகில் சர்ச்சை எழுந்துள்ளது.


ரெமோ வரிவிலக்கு

ரெமோ வரிவிலக்கு

ரெமோ படம், வரி விலக்கு பெற, ரெங்கநாதன் என்கிற மோகனா என, மாறுவதாக தகவல் பரவியது. ஆனால், படத் தயாரிப்பு நிறுவனம், ரெமோ பெயரிலேயே படத்தை வெளியிட்டுள்ளது. மேலும், கள்ளாட்டம், கொள்ளிடம், ஆண்டவன் கட்டளை போன்ற படங்களுக்கும், வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.


English summary
Censor board, will also get the 30% Entertainment Tax Exemption given by Tamil Nadu Government for Tamil films that fulfil certain criteria.The panel constituted by the State Government has watched the film and all the members have unanimously recommended for the grant of exemption for 'Remo'.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil